Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,488.99
-454.69sensex(-0.62%)
நிஃப்டி21,995.85
-152.05sensex(-0.69%)
USD
81.57
Exclusive

மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிக்கப் போகும் ஜாக்பாட்…! இதனால சம்பளம் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா..?

Gowthami Subramani October 05, 2022 & 16:00 [IST]
மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிக்கப் போகும் ஜாக்பாட்…! இதனால சம்பளம் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா..?Representative Image.

அகவிலைப்படி உயர்வைத் தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களுக்கு மற்றொரு சலுகையையும் உயர்த்த திட்டமிட்டுள்ளது. அதாவது, வீட்டு வாடகை அலொவென்சை உயர்த்துவது குறித்து மத்ஹ்டிய அரசு பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.

சமீபத்தில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை மத்திய அரசு உயர்த்தியது. இதனைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்ட புதிய அறிவிப்பால், ஊழியர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர். மத்திய அரசின் முடிவின் படி, வீட்டு வாடகை சலுகை உயர்ந்தால், ஊழியர்களின் சம்பளத்தில் பெரும் உயர்வு ஏற்படும் என கூறப்படுகிறது. அதன் படி, DA உயர்வுடன் HRA உயர்வும் அறிவிக்கப்படலாம்.

மத்திய அரசு ஊழியர்களுக்கான மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி 4% உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் வீட்டு வாடகை சலுகை அதிகரிக்கப்பட்டது. அதன் பின், அகவிலைப்படி 28 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதில், மீண்டும் அகவிலைப்படி உயர்த்தப்பட்ட நிலையில், வீட்டு வாடகைக்கான சலுகையும் உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அரசு ஊழியர்களுக்கான வீட்டு வாடகை சலுகை உயர்த்தப்படும் போது, அவர்கள் இருக்கும் நகரத்தின் வகையைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது.

இதில், 50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நகரங்களில் வசிக்கும் ஊழியர்களுக்கான வீட்டு வாடகைச் சலுகை 4 முதல் 5% வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது, இந்த நகரங்களின் பணியாளர்கள், அடிப்படைச் சம்பளத்தில் 27%ஐ வீட்டு வாடகைச் சலுகையாகப் பெறுகின்றனர்.

மேலும், 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களுக்கான வீட்டு வாடகைச் சலுகை 2% உயர்வு இருக்கும். தற்போது, இந்த நகரங்களின் பணியாளர்கள் 18% - 20% வரை HRA பெறுகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, 5 லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் வசிக்கும் பணியாளர்கள் 1% HRA அதிகரிக்கலாம். தற்போது இவர்கள் 9-10 சதவீதம் என்ற விகிதத்தில் HRA வழங்கப்பட்டு வருகிறது.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்