Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இன்று முதல் அமல்படுத்திய வரி உயர்வு…! மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு….

Gowthami Subramani September 01, 2022 & 13:45 [IST]
இன்று முதல் அமல்படுத்திய வரி உயர்வு…! மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு….Representative Image.

மத்திய அரசு இன்று முதல் உள்நாட்டு கச்சா எண்ணெய் மீதான காற்றழுத்த வரியையும், ATF ஏற்றுமதி மீதான வரியையும் உயர்த்தியுள்ளது. இது குறித்து, மத்திய அரசு தெரிவித்ததாவது, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படக் கூடிய கச்சா எண்ணெயின் விற்பனை மீதான காற்றழுத்த வரியை டன் ஒன்றிற்கு ரூ.13,300 ஆக உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இது இன்று அதாவது செப்டம்பர் 1, 2022 ஆம் நாள் முதல் அமலுக்கு வரும் எனக் கூறப்பட்டிருந்தது.

கச்சா எண்ணெய் விலை

கடந்த இரண்டு வாரங்களாக, இந்தியாவில் விற்பனை செய்யக் கூடிய கச்சா எண்ணெயின் விற்பனையானது ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதி முதல், டன் ஒன்றுக்கு ரூ.17,750 ஆகக் குறைக்கப்பட்டது. இவ்வாறு குறைக்கப்பட்ட பின்னரே, கச்சா எண்ணெயானது ஒரு டன்னுக்கு ரூ.13,000 கூடுதல் வரி விதிக்கப்பட்டது.

ஏடிஎஃப் வரி

மேலும், Aviation Turbine Fuel-ன் ஏற்றுமதி மீதான வரி லிட்டருக்கு ரூ.2 லிருந்து, ரூ.9 ஆக உயர்த்தியுள்ளது. மேலும், டீசல் ஏற்றுமதிக்கான சிறப்பு கூடுதல் வரியான கலால் வரிக்கு லிட்டருக்கு ரூ.6 –லிருந்து, 12 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

காற்றழுத்த வரி

மேலும், ஜூலை மாதம் 1 ஆம் நாள் முதல் பெட்ரோல் மற்றும் ATF மீதான வரியும், லிட்டருக்கு ரூ.6 ஏற்றுமதி வரி மற்றும் டீசல் ஏற்றுமதிக்கு ரூ.13 வரியும் மத்திய அரசு விதித்துள்ளது. மேலும், உள்நாட்டு கச்சா எண்ணெய் மீதான விற்பனைக்கு ஒரு டன்னுக்கான காற்றழுத்த வரியை ரூ.23,250 ஆக விதித்தது.

முதலில் இந்த வரிகள், ஜூலை மாதம் 20 ஆம் நாள் அன்று பகுப்பாய்வு செய்யப்பட்டது. இதில், பெட்ரோலுக்கான ஏற்றுமதி வரி லிட்டருக்கு ரூ.6 நீக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, டீசல் மற்றும் ஜெட் எரிபொருளான எரிபொருளுக்கான ஏற்றுமதி மீதான வரியையும் குறைத்துள்ளது. அதன் படி, டீசல் மீதான வரிக்கு ரூ.11-உம், ஜெட் எரிபொருள் மீதான வரிக்கு ரூ.4 –உம் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு 15 நாள்களுக்கும் ஒரு முறை

இது குறித்து, வருவாய் துறை செயலாளரான தருண் பஜாஜ் கூறியதாவது, ஜூலை 1 ஆம் தேதி நடந்த வரி விதிப்புக்குப் பிறகு, உலகளாவிய அளவில் கச்சா எண்ணெய்க்கான விலை மற்றும் அன்னியச் செலவாணி விகிதம் உள்ளிட்டவற்றைக் கருத்திக் கொண்டு, ஒவ்வொரு 15 நாள்களுக்கும் மதிப்பாய்வு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

ரஷ்யா-உக்ரைன் மோதலின் காரணமாக, எரிசக்தி விலைகள் உயர்த்தப்பட்டது. இதன் காரணமாக, எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களால் ஏற்பட்ட அதிக லாபத்தினால் அரசு முதன் முதலில் ஜூலை மாதம் 1 அன்று காற்றழுத்த வரிகளை விதித்துள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள். 

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Windfall Tax | Domestic Crude | ATF Exports | Diesel | Central Government Rises on Windfall Tax | Central Government Rises on Windfall Tax in India | Central Government Rises on Windfall Tax Crude Oil


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்