Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

பெண்களே.. கவலை வேண்டாம்… இன்னைக்கு தங்கம் விலை குறைஞ்சிடுச்சி…!

Gowthami Subramani November 12, 2022 & 11:05 [IST]
பெண்களே.. கவலை வேண்டாம்… இன்னைக்கு தங்கம் விலை குறைஞ்சிடுச்சி…!Representative Image.

ஏற்ற இறக்கத்துடன் கூடிய தங்கத்தின் விலை, கடந்த சில நாள்களாகவே அதிகரித்து வருவதால் இல்லத்தரசிகள் வருத்தத்தில் இருந்தனர். இன்று அவர்களை குஷிபடுத்தும் வகையில் தங்கம் விலை சற்றே குறைந்துள்ளது.

கடந்த சில நாள்களாகவே, தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்திலேயே இருந்து வருகிறது. கடந்த இரண்டு நாள்களாக அதிகரித்த தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளதால், இல்லத்தரசிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

கடந்த 10 நாள்களில், தங்கத்தின் விலை மிக கடுமையாக உயர்ந்தது. அதன் படி, ஆபரணத் தங்கத்தின் விலை (22 கேரட்) ஒரு சவரனுக்கு 10 நாள்களில் 1,072 ரூபாய் அதிகரித்தது.

ஏற்ற இறக்கத்திலேயே இருக்கும் தங்கத்தின் விலை, இன்று சவரனுக்கு ரூ.104 குறைந்ததுள்ளது.

இன்றைய தினத்தில் அதாவது நவம்பர் 12 ஆம் நாளின் நிலவரப்படி, ஆபரணத் தங்கம் (22 காரட்) ஒரு கிராமிற்கு ரூ.13 குறைந்து ரூ.4,905 லிருந்து 4,892 ரூபாயாகவும், ஒரு சவரனுக்கு ரூ.104 குறைந்து 39,136 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், தூய தங்கம் (24 காரட்) ஒரு கிராமிற்கு 5,294 க்கும் ஒரு சவரனுக்கு ரூ.42,352-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை குறைந்த நிலையில், வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. அதன் படி, ஒரு கிராம் வெள்ளியின் விலை 0.30 பைசா சரிந்து ரூ.67.50 ஆகவும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.67,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் தங்கத்தின் விலை