Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Rent my Handy Husband: கணவனை வாடகைக்கு விட்டு, செலிபிரிட்டியான கபுல்ஸ்…! இப்படியும் இருக்காங்களா..?

Gowthami Subramani [IST]
Rent my Handy Husband: கணவனை வாடகைக்கு விட்டு, செலிபிரிட்டியான கபுல்ஸ்…! இப்படியும் இருக்காங்களா..?Representative Image.

Rent my Handy Husband: இந்த உலகம் இன்றைய நாளில் அதிகம் தேடுவது எப்படி சம்பாதிப்பது என்பதாகும். அந்த வகையில், சில பேருக்கு மாத சம்பளம் போதாமல் இருந்து வருகிறது. இதனை ஒன்றை மட்டும் வைத்துக் கொண்டு வாழ்க்கையை வாழ் முடியாமல் தவிக்கின்றனர்.

புதிய வழிகள்

அதே சமயம், பணம் சம்பாதிப்பதற்கு ஏற்ப புது புது வழிகளையும் கண்டுபிடித்து வருகின்றனர். அந்த வகையில், சிலர் வீட்டில் உள்ள பொருள்களை விற்று பணம் சம்பாதிப்பர். இன்னும் சிலர் இன்னும் நிறைய வழிகளைக் கண்டறிந்து வருகின்றனர். அவ்வாறு பிரிட்டனைச் சேர்ந்த ஒரு பெண் தனது கணவனை வாடகைக்கு விட்டு பணம் சம்பாதிக்கிறார் என்று கூறினால் அதை உங்களால் நம்ப முடிகிறதா…?

கணவன் வாடகைக்கு

பணம் சம்பாதிக்க எத்தனையோ வழிகள் இருக்கும் போது, பிரிட்டனைச் சேர்ந்த அந்த பெண் கணவனை வாடகைக்கு விடுவதாக அறிவித்தது அனைவரையும் அதிர்ச்சியில் உள்ளனர்.  இது எந்த நாட்டிலாவது நடக்குமா..? அப்படி கணவனை வாடகைக்கு விட்டு எப்படி பணம் சம்பாதிப்பது முதலிய பல கேள்விகள் அனைவரின் மத்தியிலுமே எழுகின்றன. 

விலைவாசி உயர்வு

பிரிட்டனில் மட்டுமல்ல இன்று அனைத்து நாடுகளிலுமே பெரும்பாலும், நடுத்தர மக்களின் நிலை மிக மோசமான நிலையை அடைந்து வருகிறது. அவர்கள் வாழ்நாளில் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர். மேலும், நிறுவனங்கள் தங்களது நிறுவனங்களுக்கு உதவித்தொகை அளித்து பணிக்கு அழைக்ககூடிய நிலை தற்போது நிலவி வருகிறது.

இந்த சூழ்நிலையில், மாத சம்பளத்தைத் தவிர செலவுகளைச் சேமிப்பதற்குக் கூடுதலாக பணம் சம்பாதிக்கக் கூடிய முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பிரிட்டனில் லாரா யங் மற்றும் ஜேம்ஸ் என்ற தம்பதிகள் வாழ்ந்து வந்தனர். இந்த, பிரிட்டனைச் சேர்ந்த லாரா யங்கிற்கு ஒரு ஐடியா வந்துள்ளது. அது என்னவென்று கேட்டால், இப்படியும் ஒரு பெண் இருப்பாங்களா என்று என்ன தோன்றும்..

Hire my Handy Hubby

இந்த பெண்ணுக்குத் தோன்றிய இந்த ஐடியா இந்த உலகத்தில் யாருக்கும் தோன்றியிருக்காது. ஒவ்வொரு பெண்ணும், தனது கணவனை வீட்டில் வேலை செய்ய வைப்பது வழக்கம். ஆனால், பெரும்பாலும் இதனை வெளியில் தெரியாதவாறே செய்வார்கள். ஆனால், லாரா யங் என்ற இந்த பெண் அவரது கணவரை மற்றவர்கள் வீட்டில் செய்ய வேண்டிய வேலைக்கு உதவி செய்யத் தயார் என்று “Hire My Handy Hubby” என்று விளம்பரம் செய்துள்ளார்.

அதில் இவருக்குத் தெரியாத வேலையே இல்லை. வீட்டில் வேலை செய்வதற்கு உதவியாக இருப்பார் என விளம்பரம் செய்து வந்துள்ளார். இவருக்கு வீட்டில் கிட்சன், டைனிங் மற்றும் பெட் போன்ற அடிப்படை வேலை முதல், பெயின்டிங், டெக்கரேட்டிங், டைல்ஸ் பதித்தல் போன்ற பணிகளையும் சேர்த்து முடிப்பார்.

இது ஒரு சேவை

மேலும், இந்த பெண் அவரது கணவனின் இந்த திறன்களை அடிப்படையாகக் கொண்டு “Rent My Handy Husband” என்ற பெயரில் இணையதளத்தில் விளம்பரம் செய்துள்ளாராம். அது மட்டுமல்லாமல், Facebook போன்ற செயலிகளிலும் கணவனை வாடகைக்கு அனுப்புவதாக விளம்பரம் அளித்துள்ளார். இது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தக் கூடிய விஷயமாக உள்ளது.

செலிபிரிட்டியாக

அந்த பெண் அளித்த விளம்பரம், பக்கிங்ஹாம்ஷயர் பகுதி மட்டும் அல்லாமல், ஒட்டு மொத்த பிரிட்டன் நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்தது. இவர்களது இந்த செயலால், லாரா யங் மற்றும் ஜேம்ஸ் ஒரு செலிபிரிடிட்டியாக மாறியுள்ளனர்.

இந்த விளம்பரத்தைக் கண்டு சிலர் கிண்டலும், கேளியுடன் வேலை செய்ய அழைத்துள்ளனர். ஆனால், இது வைரல் ஆன பின்பு எல்லோருக்கும் தெரிய வந்தது என்று தெரிவித்துள்ளனர் அவர்கள்.

இவ்வாறு கணவனை வாடகைக்கு விட்டு பணம் சம்பாதிப்பது, ஒரு சில பேருக்கு நகைச்சுவையாகவும் இன்னும் சில பேர் இப்படியும் நடக்குமா..? என்ற கேள்விகளைக் கொண்டு விளங்குகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்