Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஜூன் மாத ஜிஎஸ்டி வசூல் விர்ர்ர்ர்.. வளர்ச்சியில் தமிழகம் 3ஆம் இடம்!!

Sekar July 01, 2022 & 15:17 [IST]
ஜூன் மாத ஜிஎஸ்டி வசூல் விர்ர்ர்ர்.. வளர்ச்சியில் தமிழகம் 3ஆம் இடம்!!Representative Image.

நேற்றுடன் முடிந்த ஜூன் மாதத்தில் மாதாந்திர மொத்த ஜிஎஸ்டி கலெக்க்ஷன் ரூ.1,44,616 கோடியாக பதிவாகியுள்ளது. இது ஜிஎஸ்டி முறை அமலான பிறகு பதிவாகும் இரண்டாவது அதிகபட்ச வசூலாகும். மேலும் கடந்த வருடம் ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் 56 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

பொருட்களின் இறக்குமதியின் வருவாய் கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 55% உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் உள்நாட்டு பரிவர்த்தனைகள் மற்றும் சேவைகளின் இறக்குமதி மாதத்தில் 56% உயர்ந்துள்ளது.

மொத்த ஜிஎஸ்டி இழப்பீட்டு வரி வசூல் ₹11,018 கோடியை எட்டியது. இதில் ₹1,197 கோடி பொருட்கள் இறக்குமதி மூலம் வசூலிக்கப்பட்டது, இது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து அதிகபட்சமாக இருந்தது. மார்ச் மாதத்திலிருந்து தொடர்ந்து நான்காவது மாதமாக மாதந்தோறும் ஜிஎஸ்டி வருவாய் ₹1.40 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. மேலும் ஒட்டுமொத்த அளவில் இது ஐந்தாவது முறையாகும்.

“2022-23 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான சராசரி மாதாந்திர மொத்த ஜிஎஸ்டி வசூல், கடந்த ஆண்டு இதே காலாண்டில் சராசரி மாத வசூலான ₹1.10 லட்சம் கோடியிலிருந்து ₹1.51 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது 37% அதிகரிப்பைக் காட்டுகிறது. பொருளாதார மீட்சி, வரி ஏய்ப்பு எதிர்ப்பு நடவடிக்கைகள், குறிப்பாக போலி பில்லர்களுக்கு எதிரான நடவடிக்கை ஆகியவை ஜிஎஸ்டி உயர்த்தப்பட்டதற்கு பங்களிக்கிறது” என்று நிதி அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே பெரும்பாலான மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வருவாயில் கூர்மையான உயர்வை பதிவு செய்தன. கேரளாவால் கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடும்போது 116% மற்றும் லடாக்கில் 118% வளர்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் டையூ & டாமன் யூனியன் பிரதேசத்தில் (-13%) எதிர்மறையான வளர்ச்சி மற்றும் மத்திய அதிகார வரம்பிற்கு உட்பட்ட பகுதிகள் -12% எதிர்மறையான வளர்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.

பல மாநிலங்களில் 50% மேலான வளர்ச்சி

பல மாநிலங்கள் வசூலில் 50 சதவீதத்துக்கும் மேலான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. ஜூன் மாத ஜிஎஸ்டி வசூலில் கேரளா மற்றும் லடாக்கிற்கு அடுத்து தமிழ்நாடு 83% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அதைத் தொடர்ந்து உத்தரகாண்ட் (82%), ஹரியானா (77%), கர்நாடகா (73%), மகாராஷ்டிரா (63%), மேற்கு வங்கம் (58%), ராஜஸ்தான் (56%) , பஞ்சாப் (51%) மற்றும் குஜராத் (50%) ஆகிய மாநிலங்கள் உள்ளன.

உத்தரபிரதேசத்தில் வருவாய் 49% அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் முறையே 46% மற்றும் 37% வளர்ச்சி பதிவாகியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்