Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Cryptocurrency Fraud Detect Tool: கிரிப்டோகரன்சி மோசடியைக் கண்டுபிடிக்க டூலா…? அப்ப இனிமே, கிரிப்டோகரன்சிய நம்பலாமா..?

Gowthami Subramani June 10, 2022 & 16:00 [IST]
Cryptocurrency Fraud Detect Tool: கிரிப்டோகரன்சி மோசடியைக் கண்டுபிடிக்க டூலா…? அப்ப இனிமே, கிரிப்டோகரன்சிய நம்பலாமா..?Representative Image.

Cryptocurrency Fraud Detect Tool: கிரிப்டோகரன்சிகளை மோசடிகளைக் கண்டறிய உதவும் கருவியை ஐஐடி கான்பூர் கண்டுபிடித்துள்ளது. இது குறித்த விவரங்களைக் காண்போம்.

கிரிப்டோகரன்சி பயன்பாடு

இந்த நவீன காலகட்டத்தில் அனைவருக்கும் முதலில் மனதில் தோன்றுவது எவ்வாறு, எளிதாக பணம் சம்பாதிக்கலாம் என்பது தான். அந்த வகையில், ஏராளக்கணக்கான தொழில்நுட்பங்கள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக, கிரிப்டோகரன்சி சிறந்து விளங்குகிறது.

ஆனால், எளிதாக பணம் பெறுவதென நம்முடைய பணத்தை இழக்கும் நிலைக்கும் வந்து கொண்டிருக்கிறோம். அதிலும் கிரிப்டோகரன்சியில் இன்வெஸ்ட் செய்து, பணமிழப்பவர்கள் ஏராளம் பேர் உள்ளனர் (Is Bitcoin Legal?).

கிரிப்டோ மோசடி

சாதாரணமாக, நம்மைச் சுற்றி இருக்கும், அல்லது உறவினர்களிடமோ, அல்லது இன்னும் வேறு சிலரிடமோ நம்முடைய பணத்தைக் கொடுத்து ஏமாந்து கொண்டு தான் இருக்கிறோம்.  இந்த சூழ்நிலையில் கிரிப்டோகரன்சி என்ன சாதாரண ஒன்றா? அப்படி கிரிப்டோகரன்சியில் மோசடி நடக்குமா என்று நினைக்கிறீர்களா..? கண்டிப்பாக நடக்கிறது (Bitcoin is Legal in India).

அதன் படி, கிரிப்டோகரன்சிகள் பரிவர்த்தனைகள் மூலம் மோசடி செய்யும் வழக்குகளைக் கண்டறிந்து அதனை முறியடிக்க உத்திரப் பிரதேச காவல் துறைக்கு உதவக் கூடிய வகையில், இந்திய தொழில்நுட்ப நிறுவனம் நம் நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட கருவியை வழங்கியுள்ளது.

மோசடிகளைக் கண்டறியும் கருவி

இந்த கிரிப்டோகரன்சி மோசடிகளைக் கண்டறியும் கருவியை IIT – Kanpur -ஐச் சேர்ந்த பேராசிரியர் சந்தீப் சுக்லா உருவாக்கியுள்ளார். இந்த கருவி மூலம் கிரிப்டோகரன்சி மூலம் நடக்கப்படும் பரிவர்த்தனைகளை எளிதாகப் பகுப்பாய்வு செய்ய முடியும் (Tool for Investigate Cryptocurrency Fraud).

இது குறித்து பேராசிரியர் சுக்லா குறிப்பிட்டதாவது, “மற்ற வெளிநாட்டு உபகரணங்களை விட இந்தக் கருவி மிக மலிவானது. மேலும், இந்தக் கருவி உத்திரப் பிரதேச காவல்துறைக்கு செப்டம்பர் மாதத்திற்குள் உதவக் கூடியவையாக அமையும்” என்று கூறியுள்ளார்.

இதில் 37,000 கணக்குகள், வங்கிகள் மற்றும் அதன் கார்டுகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது (Fraud Detection Tool in Cryptocurrency).

இந்த செயல்பாடு இணைய பாதுகாப்பு விழிப்புணர்வுக்கும், காவல் துறைகளுக்கு திறனை வளர்ப்பதற்கான முதல் நிகழ்வு என்றும் கூறப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்