Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to invest in Cryptocurrency: கிரிப்டோவில் இன்வெஸ்ட் பண்ணனுமா? இந்திய பணக்காரர்களும் இப்படி தான் ஃபாலோப் பண்றாங்க.

Gowthami Subramani June 07, 2022 & 10:00 [IST]
How to invest in Cryptocurrency: கிரிப்டோவில் இன்வெஸ்ட் பண்ணனுமா? இந்திய பணக்காரர்களும் இப்படி தான் ஃபாலோப் பண்றாங்க.Representative Image.

How to invest in Cryptocurrency: கிரிப்டோவில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் ஏராளமானோர் இருப்பர். ஆனால், ஒரு சில பேருக்கு அதில் எப்படி முதலீடு செய்வது என்று தெரியாது. இன்வெஸ்டர்ஸ் முதலீடு செய்வதற்கு முன்பு, கிரிப்டோவில் இருக்கும் கட்டுப்பாடுகள் பற்றியும், அதன் முழு விவரங்களையும் தெரிந்து கொள்வது மிக அவசியம்.

கிரிப்டோ இன்வெஸ்ட்மென்ட் (Crypto Investment in Tamil)

இந்தியாவில் கிரிப்டோ முதலீடுகளுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் இருக்கின்றன. இந்நிலையில், அதில் யூபிஜி பேமெண்ட் பிரச்சனை, மத்திய அரசின் மசோதாக்கள் போன்ற பிரச்சனைகள் பெரிதாகக் கருதப்படுகின்றன. இது போன்ற பல்வேறு பிரச்சனைகள் இருக்கும் சமயத்தில், இந்தியப் பணக்காரர்கள் கிரிப்டோவில் முதலீடு செய்வதற்கான முறையைக் கண்டுபிடித்துள்ளனர்.

A group of coins on a keyboard

Description automatically generated with medium confidence

அயல்நாட்டு முதலீடு

டெக்னாலஜி எல்லையில்லா சூழலாய் வளர்ந்து கொண்டு வருகிறது. டெக்னாலஜியின் மீது அதிக ஆர்வம் கொண்டவர்கள், அதில் எவ்வாறு பணம் சம்பாதிக்கலாம் என்று யோசிப்பர் அல்லது பணம் சம்பாதிப்பதில் எவ்வாறு டெக்னாலஜியின் மூலம் மேம்படுத்தலாம் என்று நினைப்பர். அந்த வகையில் தான், கிரிப்டோகரன்சியின் முதலீடு செய்வதற்கான ஒரு புதிய யுக்தியை உருவாக்கியுள்ளனர்.

அதன் படி, கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களும், குடும்ப ஆர்வலர்களும் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்வதற்கு Overseas Direct Investment (ODI) என்ற வழியில் LRS முறையின் படி முதலீடு செய்யும் முறையைக் கண்டுபிடித்துள்ளனர். ஆர்பிஐ மூலம் இயக்கப்படும் வெளிநாட்டு முதலீடு சேவையே LRS ஆகும். இது Liberalized Remittance Facility என்று கூறுவர் (Crypto ODI In Tamil).

கிரிப்டோவில் LRS முறை

A picture containing clipart

Description automatically generated

கிரிப்டோவில் LRS முறை என்பது Liberalized Remittance Scheme. அதாவது தாராளமயமாக்கப்பட்ட பணம் அனுப்பு வசதி. இந்த முறையைப் பயன்படுத்தி, எளிதாக வெளிநாட்டுக்குப் பணம் அனுப்ப முடியும் (Crypto LRS in Tamil). ஆனால், இதில் நேரடியாக எந்த நிதியியல் திட்டத்தின் கீழும் முதலீடு செய்ய முடியாது. இதன் காரணமாக பெரும்பாலானோர் கிரிப்டோகரன்சிக்கு  மாற்று வழியைத் தேடிக் கொண்டு வந்தனர் (How to invest in Cryptocurrency, Overseas Direct Investment ODI LRS Scheme).

NBFC நிறுவனங்கள்

Icon

Description automatically generated

இந்தியாவில் இருக்கக் கூடிய NBFC (Non-Banking Financial Company) நிறுவனங்கள் வாயிலாக, இந்திய பெரும் பணக்காரர்கள் வெளிநாட்டில் இருக்கும் தங்களது சொந்த முதலீட்டு நிறுவனத்திற்குப் பணப் பரிமாற்றம் செய்வதற்காக உதவுகின்றன. இதன் மூலம், வெளிநாட்டுக்குப் பணத்தை அனுப்புவதற்குக் குறிப்பிட்ட நிறுவனங்களை அதாவது சேவை அளிக்கக்கூடிய நிறுவனங்களைத் தேர்வு செய்யலாம் (How to Invest in Cryptocurreny).

கிரிப்டோ ODI சேவை

A picture containing text, clipart

Description automatically generated

ODI என்பது Overseas Direct Investment. அதாவது அயல்நாட்டு நேரடி முதலீடு என்று கூறுவர். இந்தச் சேவை, இந்திய முதலீட்டாளர்களை நேரடியாக வெளிநாட்டு நிதியியல் திட்டத்தில் சேர்ந்து முதலீடு செய்வதற்கு அனுமதி அளிக்கும். ஆனால், இவ்வாறு முதலீடு செய்யும் நபர்கள் இந்தியா மற்றும் வெளிநாட்டில் முன் அனுமதி பெற்றிருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்