Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Cryptocurrency Important Information: வரலாறு காணாத அளவில் சரிந்த பிட் காயின்…. எல்லாம் போச்சே…. புலம்பும் முதலீட்டாளர்கள்….!

Gowthami Subramani June 13, 2022 & 18:30 [IST]
Cryptocurrency Important Information: வரலாறு காணாத அளவில் சரிந்த பிட் காயின்…. எல்லாம் போச்சே…. புலம்பும் முதலீட்டாளர்கள்….!Representative Image.

Cryptocurrency Important Information: கிரிப்டோகரன்சிகளில் முதன்மையாகக் கருதப்படும் பிட்காயின் வரலாறு காணாத சரிவிற்கு இறங்கியுள்ளது. இது பிட்காயின் மதிப்பான மிக மோசமான சரிவினைக் கண்டு வருவதைக் குறிப்பிடுகிறது. மேலும், இந்த கடும் சரிவால் முதலீட்டாளர்களின் பெரும் நம்பிக்கை வீணாக போனதாக உள்ளது (Cryptocurrency Latest news).

சந்தை மூலதனம்

கிரிப்டோ சந்தையில் பயன்படுத்தப்படக் கூடிய நாணயங்கள் நிறைய உள்ளன. அதிலும் குறிப்பாக கிரிப்டோ கரன்சியிலேயே முதலிடத்தில் வகித்து நிற்பது பிட் காயின் ஆகும். இந்த பிட் காயின் இன்வெஸ்ட் செய்யும் முதலீட்டாளர்கள் தினந்தோறும் ஏற்ற இறக்கங்களைப் பார்த்துக் கொண்டு தான் வருகின்றனர் (Cryptocurrency Latest Update). ஆனால், இதில் ஒவ்வொரு முறையும் நடக்கும் ஏற்ற, இறக்கத்தில் சிறிதளவே வித்தியாசங்கள் காணப்படும்.

கடும் வீழ்ச்சி

இந்த நிலையில், திடீரென கிரிப்டோ சந்தையில் பிட் காயினின் மதிப்பு மிக அதிக அளவு குறைந்து காணப்பட்டது. இந்த அளவுக்கு மோசமான சரிவு முதலீட்டாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது (Cryptocurrency Today News). மேலும், இந்த தாக்கம் தொடருமா..?  இல்லையெலின் கிரிப்டோவின் எதிர்காலம் எப்படி இருக்கும்? இது குறித்து கிரிப்டோ நிபுணர்களின் கணிப்பு என்னவாக உள்ளது? போன்ற பல விவரங்களைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

பிட்காயினின் நிலவரம்

இன்று (ஜூன் 13) காலை 8 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் கிரிப்டோ சந்தையில் மூலதன மதிப்பானது 1.04 டிரில்லியன் டாலர் அளவுக்கு சரிவினைக் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது (Is Bitcoin Safe for Investment).

தற்போது, மதியம் 3 மணி நிலவரப்படி, 12.06% சரிவினைக் கண்டு, 24,167.79 டாலர்களாக சரிவினைக் கண்டுள்ளது.

கடும் வீழ்ச்சிக்கான காரணம்

கொரோனா மற்றும் இன்னும் பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் பிட் காயின் மதிப்பானது பெரும் சரிவைக் கொண்டுள்ளது. இந்தியா மட்டுமல்லாது, அமெரிக்காவிலும் பணவீக்கம் அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதன் காரணமாக அதிகரித்து வரும் பணவீக்கத்தினைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர, வட்டி விகிதத்தினையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன (Cryptocurrency Today Update for Investors).

இது பாமர மக்களின் வாழ்க்கையைப் பாதிக்கும் வகையில் செயல்படக் கூடியதாக அமைகிறது. இருந்தபோதிலும், இதன் வளர்ச்சி விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்ற இறக்கம் அதிகரிப்பு

கடந்த சில தினங்களாக, கிரிப்டோவில் டாலரின் மதிப்பு ஏற்றத்தில் தான் இருந்து வருகிறது. ஆனால், இன்று ஜூன் 13 ஆம் நாள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்த நிலையில், மீண்டும் நாளையும் (ஜூன் 14) அதிக ஏற்ற இறக்கம் காணப்படலாம் எனவும் குறிப்பிடப்படுகிறது. இது சந்தையில் முதலீட்டாளர்களின் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது (Crypto News Today in Tamil). எனவே, கிரிப்டோவில் முதலீடு செய்யும் நபர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்படுவது நல்லது என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்