Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஆன்லைன் லோன் ஆப் மோசடி.. பெங்களூரில் அமலாக்கத்துறை வேட்டை!!

Sekar September 03, 2022 & 17:40 [IST]
ஆன்லைன் லோன் ஆப் மோசடி.. பெங்களூரில் அமலாக்கத்துறை வேட்டை!!Representative Image.

சீனர்களால் இயக்கப்படும் சட்டவிரோத ஆன்லைன் உடனடி ஸ்மார்ட்போன் அடிப்படையிலான கடன்களுக்கு எதிராக நடந்து வரும் விசாரணையின் ஒரு பகுதியாக, Razorpay, Paytm மற்றும் Cashfree போன்ற ஆன்லைன் பேமெண்ட் கேட்வேக்களின் பெங்களூரு வளாகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

பெங்களுருவில் உள்ள ஆறு இடங்களில் நேற்று இந்த சோதனை வேட்டை தொடங்கப்பட்டது என்று அமலாக்கத்துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. தொடர்ந்து தேடுதல் பணி நடைபெற்று வருவதாக அமலாக்க இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

இந்த சோதனையின் போது, வணிகர் ஐடிகள் மற்றும் இந்த சீன நபர்களின் வங்கிக் கணக்குகளில் வைக்கப்பட்டிருந்த ரூ.17 கோடி மதிப்புள்ள நிதிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

விசாரணையின் கீழ் உள்ள நிறுவனங்கள் பல்வேறு வணிகர் ஐடிகள்/பணம் செலுத்தும் கேட்வேக்கள்/வங்கிகளுடன் வைத்திருக்கும் கணக்குகள் மூலம் வருமானத்தை உருவாக்குகின்றன, மேலும் அவை கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தில் பதிவுசெய்யப்பட்ட முகவரியிலிருந்து செயல்படவில்லை. மேலும் அவை போலி முகவரிகள் என அமலாக்கத்துறை கூறியது.

பணமோசடி வழக்கு பெங்களூரு போலீஸ் சைபர் கிரைம் ஸ்டேஷன் மூலம் பதிவு செய்யப்பட்ட 18 எஃப்.ஐ.ஆர்களின் அடிப்படையில், அமலாக்கத்துறை இந்த வழக்கை கையில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்