Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 73,852.94
114.49sensex(0.16%)
நிஃப்டி22,402.40
34.40sensex(0.15%)
USD
81.57
Exclusive

அர்னால்டை முந்தி முதலிடத்திற்குச் சென்ற எலான் மஸ்க்.! | World’s Richest Person

Gowthami Subramani Updated:
அர்னால்டை முந்தி முதலிடத்திற்குச் சென்ற எலான் மஸ்க்.! | World’s Richest PersonRepresentative Image.

உலகில் உள்ள பல்வேறு தொழிலதிபர்கள் போட்டியுடன் செயல்பட்டு, நவீன தொழில்நுட்பைக் கையாண்டு புதிய உற்பத்தியைத் தொடங்கி வருகின்றனர். அந்த வகையிலேயே, டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்-உம் ஆட்டோமொபைல் துறையில் புதிய வாகனங்களை வெளியிட்டு வந்தார்.

அடுத்ததாக, இவர் சமூக வலைதளமான ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதில், அவருடைய பங்கு ஏறும் தாழுமாக இருந்தது. மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் இரண்டே நாள்களில் முதலாவது பணக்காரர் என்ற அந்தஸ்தை இழந்தார். அதன் படி, ஒரே நாளில் சுமார் 2 பில்லியன் டாலர்களை இழந்து இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டார். அதே சமயம், பிரெஞ்சு பில்லியனர் பெர்னார்ட் அர்னால்ட் உலகின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தார்.

தற்போது, மீண்டும் எலான் மஸ்க், அர்னால்டை வீழ்த்தி முதலிடத்திற்கு முன்னேறினார். பெர்னார்ட் அர்னால்ட் அவர்களின் LVMH 2.6% சரிந்ததால், எலான் மஸ்க் மீண்டும் உலகின் பணக்காரர் ஆனார். 74 வயதா, அர்னால்ட், கடந்த 2022 டிசம்பரில் மஸ்கை முந்தினார். மீண்டும் இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டு, மறுபடியும் முதலிடத்தைப் பிடித்தார்.

ஆனால், தொழில்நுட்பத் துறை போராட்டம் மற்றும் ஆடம்பரம், பணவீக்கத்தை எதிர்கொண்டு பின்னடைவைக் குறிக்கிறது. இதில், லூயிஸ் உய்ட்டன், ஃபெண்டி, மற்றும் ஹென்னேஸி போன்ற பிராண்டுகளுக்குச் சொந்தமான LVMH நிறுவனத்தை பெர்னார்ட் அர்னால்ட் அவர்கள் நிறுவினார்.

மேலும், LVMH-ன் பங்குகள், கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து சுமார் 10% சரிந்தது. இதனால், ஒரு கட்டத்தில் அர்னால்டின் நிகர மதிப்பில் இருந்து $11 பில்லியன் ஒரே நாளில் அழிக்கப்பட்டது. அதே சமயம், எலான் மஸ்க் இந்த ஆண்டு $55.3 பில்லியனுக்கும் அதிகமாக சம்பாதித்துள்ளார். இதற்கு, இவரின் நிறுவனமான டெஸ்லா இன்க். ஆஸ்டின் சார்ந்த வாகன உற்பத்தியே ஆகும். இது அவரது சொத்துக்களில் இன்று வரை ஆண்டுக்கு 66% அதிகரித்துள்ளது.

ப்ளூம்பெர்க் பில்லியனர் குறியீட்டின் படி, அர்னால்ட்டின் தற்போதைய சொத்து மதிப்பு, $186.6 பில்லியனாகவும், எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு $192.3 ஆகவும் உள்ளதாகக் கூறப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்