Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மீண்டும் ED நடத்திய ரெய்டு.. சிக்கிய சீனக் கட்டுப்பாட்டு நிறுவனங்கள்.. ரூ.9.82 கோடி முடக்கம்..!

Gowthami Subramani September 29, 2022 & 18:30 [IST]
மீண்டும் ED நடத்திய ரெய்டு..  சிக்கிய சீனக் கட்டுப்பாட்டு நிறுவனங்கள்.. ரூ.9.82 கோடி முடக்கம்..!Representative Image.

கடந்த சில நாட்களாகவே, இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை சீனாவில் கட்டுப்பாட்டில் இயங்கக் கூடிய செயலிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன் படி, கடந்த செப்டம்பர் மாதம் 14 ஆம் நாள் இந்தியாவின் முக்கிய இடங்களான, டெல்லி, குருகிராம், புனே, சென்னை, மும்பை, ஜெய்ப்பூர், ஜோத்பூர், பெங்களூர், ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் விசாரணை நடைபெற்றதாகக் கூறப்பட்டது.

இந்த நிலையில், தற்போது “HPZ” என்ற அப்ளிகேஷன் அடிப்படையிலான டோக்கனை தவறாகப் பயன்படுத்துதல், மற்றும் இது தொடர்பான பல்வேறு பயன்பாடுகள் குறித்து அமலாக்க இயக்குநரகம் விசாரணை செய்துள்ளது. இதில், சீனக் கட்டுப்பாட்டின் கீழ் வரும் ஒன்பது நிறுவனங்களின் ரூ.9.82 கோடி மதிப்பிலான கணக்கு நிலுவைகளை முடக்கம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த விசாரணையின் கீழ், பண மோசடி செய்த நிறுவனங்கள் குறித்த விவரங்களை இன்று அதாவது செப்டம்பர் 29 ஆம் நாள் தெரிவித்துள்ளது.

இவ்வாறு, Mobicred Technology Private Limited, Comein Network Technology Private Limited, Magic Data Technology Private Limited, Baitu Technology Private Limited, Wecash Private Limited, Larting Private Limited Technology, Magic Bird Technology Private Limited, Aliyeye Network Technology India Pvt Ltd, Acepearl Services Private Limited போன்ற நிறுவனங்கள், பல்வேறு NBFC-களுடன் சேவை ஒப்பந்தங்களில் இணைந்து பல சந்தேகத்துக்குள்ளான வகையில் லோன் மற்றும் மற்ற அப்ளிகேஷன்களை இயக்கி, பொதுமக்களிடம் இருந்து நிதியைப் பெற ஈடுபட்டது.

இந்த HPZ டோக்கன் மற்றும் பிறவற்றிற்கு எதிராக சைபர் கிரைம் காவல் நிலையம், இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ், கடந்த அக்டோபர் 08, 2021 ஆம் நாள் முதல் தகவல் அறிக்கையின் படி அமலாக்கத்துறை விசாரணையத் தொடங்கியது.

அதாவது HPZ என்பது, ஒரு அப்ளிகேஷன் அடிப்படையிலான டோக்கன் ஆகும். இதன் மூலம், பிட்காயின் மற்றும் பிற கிரிப்டோகரன்சிகளுக்கான சுரங்க இயந்திரத்தில் முதலீடு செய்வதாகும். இது முதலீடுகளுக்கு எதிராகப் பயனர்களுக்குப் பெரும் ஆதாயங்களை அளிப்பதாகவும் உறுதியளித்தது. ஆனால், இது அவர்களின் முதலீட்டை இரட்டிப்பாக்குதல், பெருக்குதல் என்ற நோக்கத்தோடு அவர்களுக்கு விளைவை ஏற்படுத்துவதாக இருந்தது. இதில் மோசடியாளர்களின் மிகப் பெரிய செயல்பாடே, பாதிக்கப்பட்டவர்களை முதலீடு செய்ய தூண்டுதல் ஆகும்.

இவ்வாறு நிதி மோசடி வழக்கில், சீனக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கக் கூடிய செயலிகள் சிக்கியுள்ளன. இவற்றில் கடந்த செப்டம்பர் 14 ஆம் நாள் நடத்தப்பட்ட சோதனையில் நிறுவனங்களின் வங்கி மற்றும் மெய்நிகர் கணக்கு நிலுவைகள் என ரூ.46.67 கோடியை முடக்கியது. மேலும், தற்போது மேலும் 9.82 கோடியை முடக்கி மொத்தமாக இந்த வழக்கில் ரூ.56.49 கோடியாக உள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்