Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஓய்வூதியாரர்களுக்கு குட் நியூஸ்.. இனி உங்களுக்கு இந்த கஷ்டம் இருக்காது…!

Gowthami Subramani [IST]
ஓய்வூதியாரர்களுக்கு குட் நியூஸ்.. இனி உங்களுக்கு இந்த கஷ்டம் இருக்காது…!Representative Image.

ஓய்வூதியதாரர்களுக்கு உதவும் வகையில், ஒரு புதிய வசதி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம், ஓய்வூதியதாரர்கள் பெருமளவில் பயனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓய்வூதியதாரர்கள்

ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டு தோறும் நேர்காணல் வைத்து, அவர்களின் இருப்பை உறுதிபடுத்த அரசு செயல்படுகிறது. இதில் அவர்களது Present-ஐ வைத்து, அவர்களுக்கு இதர ஓய்வூதியம் வழங்குவதற்கான நடவடிக்கையில் ஈடுபடும்.

வாழ்நாள் சான்றிதழ்

ஆனால், கொரோனா காலகட்டத்தில் நேர்காணல் வைக்கப்பட இயலாததால், இந்த 2022 ஆம் ஆண்டிற்கான வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்கும் படி ஓய்வூதியதாரர்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த சான்றிதழின் உதவி கொண்டு ஓய்வூதியம் பெறும் நபர் உயிருடன் இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ளலாம். கடந்த 2020 மற்றும் 21 ஆகிய இரு ஆண்டுகளில் வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிப்பு தற்காலிகமாக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதன் பின், இந்த 2022 ஆம் ஆண்டிற்கான வாழ்நாள் சான்றிதழை இந்த ஜூலை முதல் செப்டம்பர் மாதத்திற்குள் சமர்பிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிப்பதற்கான வழிமுறைகளைத் தெரிந்து கொள்ள இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

புதிய வசதி

ஆண்டுக்கு ஒரு முறை ஒவ்வொரு ஓய்வூதியதாரரும், வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு சமர்ப்பித்தால் மட்டுமே பென்சன் தொடர்ந்து கிடைக்கும். இதில், வயது முதிர்ந்த ஓய்வூதியதாரர்களுக்கு உதவும் வகையில் டிஜிட்டல் முறையில் வாழ்நாள் சான்றிதழை சமர்பிப்பதற்கான அறிவிப்பு சில நாள்களுக்கு முன் கொண்டு வரப்பட்டது.

இந்த டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் முறையின் மூலம், எளிதாகவும், வயதானவர்கள் சான்றிதழ் பெற ஏற்படும் அலைச்சலையும் தவிர்க்க முடியும்.

முகம் பதிவு செய்தல் வசதி

அரசு வெளியிட்ட அறிவிப்பின் படி, தொழிலாளர்கள், வருங்கால வைப்பு நிதி நிறுவனத்திடம் பென்சன் வாங்கும் நபர்களுக்கு முகம் பதிவு செய்யக்கூடிய புதிய வசதியை (Face Recognition Facility) அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முறையைப் பயன்படுத்தி, டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

அறங்காவலர் கூட்டம்

EPFO அறங்காவலர் குழுவின் 231 ஆவது கூட்டம் ஜூலை 30 ஆம் நாள் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ஓய்வூதியதாரர்களுக்கான இந்த சிறப்பான திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த அருமையான திட்டத்தின் மூலம் சுமார் 73 லட்சம் அரசு ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்