Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இந்தியாவின் டிஜிட்டல் புரட்சி அமெரிக்காவிற்கான முதலீட்டு வாய்ப்பு…! நிதியமைச்சர் நிர்மலா சீதாரமானின் கருத்து…

Gowthami Subramani September 07, 2022 & 12:40 [IST]
இந்தியாவின் டிஜிட்டல் புரட்சி அமெரிக்காவிற்கான முதலீட்டு வாய்ப்பு…! நிதியமைச்சர் நிர்மலா சீதாரமானின் கருத்து…Representative Image.

இந்தியாவின் டிஜிட்டல் புரட்சி, அமெரிக்காவிற்கு முதலீட்டு வாய்ப்புகளை வழங்கி வருவதாக, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் மயமாக்கல்

இந்திய நாட்டை டிஜிட்டல் மயமாக்குதலின் நோக்கத்திற்காகவே, பல்வேறு நடவடிக்கைகள் அரசால் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘’டிஜிட்டல் வர்த்தகத்தைப் பொறுத்த வரை, இந்தியாவின் திறந்த நெட்வொர்க் சில்லறை வர்த்தகம் மற்றும் உற்பத்தித் துறையில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது” எனக் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் வளர்ச்சி

உள்நாட்டை மேம்படுத்துவதுடன் வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் வர்த்தகம் செய்வதற்கான வாய்ப்புகளை வழங்குவதாகவும் கூறப்படுகிறது. இந்த டிஜிட்டல் வர்த்தகத்தின் மதிப்பும் மேலோங்கி, முக்கிய வளர்ந்த நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ள அமெரிக்காவிற்கு, முதலீடுகளை ஈட்டுவதற்கு வழி செய்வதாக நிதியமைச்சர் கூறியுள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம், முதலீடுகளை ஊக்குவிப்பதற்கான சாத்தியமான முறைகளை அரசாங்கம் நிவர்த்தி செய்யும் என முதலீட்டாளர்களுக்கு நிதியமைச்சர் உறுதி அளித்தார். மேலும் சான்பிரான்சிஸ்கோவில், முதலீட்டாளர்கள் தொடர்ந்து ஈடுபடுவதற்காக ஊக்குவித்தார்.

ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்

இந்திய டிஜிட்டல் மயமாக்குதலின் மூலம், நாட்டை மேம்படுத்தவும், முதலீட்டாளர்கள் ஆலோசனைகளைப் பெற மற்றும் முறைகளைப் புரிந்து கொள்ள தேவையான தீர்வுகளை வழங்க தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

மேலும் இந்தியாவில் StartUp என்ற சொல்லை அமைத்ததற்குக் காரணம், நாட்டில் பெரும்பாலும் ஸ்டார்ட் அப் சுற்றுச் சூழலை அமைத்து மேம்படுத்துவதற்காக அமைத்ததாகும். இந்த StartUp என்ற செயல்திறன் மிக்க சொல்லை DPIITGol அமைத்துள்ளது. அதன் படி, புதிதாக தொழில் தொடங்க முனைவோர்களை DPITGol உடன் ஈடுபட ஊக்குவித்ததாகவும், நிதியமைச்சர் டீவீட் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள். 

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

India's Digital Revolution | Nirmala Sitharaman | US | Investment Opportunities to US | Evolution of Digital Payments in India | Evolution of Digital Banking in India | Evolution Digital India PVT LTD | Evolution of Digital Marketing in India | Evolution of Digital Payments in India PDF | Digital Evolution in India


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்