Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

New GST Rate from Today: இன்று முதல் அமலுக்கு வரும் புதிய ஜிஎஸ்டி….! இதுக்கெல்லாம் கண்டிப்பா ஜிஎஸ்டி உண்டு…!

Gowthami Subramani July 18, 2022 & 11:10 [IST]
New GST Rate from Today: இன்று முதல் அமலுக்கு வரும் புதிய ஜிஎஸ்டி….! இதுக்கெல்லாம் கண்டிப்பா ஜிஎஸ்டி உண்டு…!Representative Image.

New GST Rate from Today: ஜிஎஸ்டி கவுன்சிலிங் கூட்டத்தின் முடிவுகள் இன்று அமலுக்கு வர உள்ளதால், சில பொருள்கள் மற்றும் சேவைகளுக்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். மேலும், சில பொருள்களின் மீதான வரி வெளியேற்றமும் குறைய உள்ளது.

கடந்த ஜூன் மாதம் மத்திய நிதியமைச்சர் சீதாராமன் தலைமையில் 47 ஆவது ஜிஎஸ்டி கூட்டம் நடத்தப்பட்டது. நாட்டின் பொருளாதார இழப்பு அதிகரித்து வருவதால், சில பொருள்கள் மற்றும் சேவைகளுக்கான ஜிஎஸ்டி கட்டணத்தை உயர்த்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவில், ஜிஎஸ்டி விலை உயர்த்தப்பட்ட பொருள்கள் அல்லது சேவைகளையும், விலை குறைக்கப்பட்ட பொருள்கள் அல்லது சேவைகளைப் பற்றியும் காண்போம்.

ஜிஎஸ்டி வரி அதிகம் உயர்த்தப்பட்ட பொருள்கள்

முன்பே பேக் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும், லேபிள் இடப்படும் பன்னீர், தயிர், ஆட்டா போன்ற உணவுப் பொருள்களுக்கு 5% ஜிஎஸ்டி

மேப், சார்ட்ஸ் (வரைபடங்கள்), அட்லஸ்கள், போன்றவைக்கான ஜிஎஸ்டி 12%

வங்கி காசோலைகளை வழங்குவதற்கு வசூலிக்கும் கட்டணத்தில் ஜிஎஸ்டி 18%

சோலார் வாட்டர் ஹீட்டர்களுக்கான ஜிஎஸ்டி வரி 5%-லிருந்து, 12% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ரூ.5000-க்கும் அதிகமாக வாடகை உள்ள மருத்துவ அறைகளுக்கு 5% ஜிஎஸ்டி

Tetra Packs-க்கு 18% ஜிஎஸ்டி

சாலைகள், பாலங்கள், மெட்ரோ, கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள், ரயில்வே, சுடுகாடு போன்ற பணி ஒப்பந்தத்திற்கான சேவைகளுக்கும் ஜிஎஸ்டி 12%-லிருந்து 18% ஆக உயர்வு

மை அச்சிடும், வரைதல் அல்லது எழுதுதல் போன்றவற்றின் மீதான வரி விகிதங்கள், காகித கத்தி, வெட்டும் கத்திகள், பென்சில் ஷார்ப்னெர்ஸ், கருவிகளை வரைதல் மற்றும் குறிக்கும் கருவிகள், LED விளக்குகள் போன்றவற்றிற்கு 12%-லிருந்து 18% ஆக உயர்வு.

ஜிஎஸ்டி குறைக்கப்படும் பொருள்கள் அல்லது சேவைகள்

எரிபொருளின் விலை அடங்கிய டிரக், சரக்கு வண்டிகளின் வாடகை 18%-லிருந்து 12% ஆக குறைவு

Ostomy சாதனங்கள், ரோப்வே மூலம் சரக்குகள் மற்றும் பயணிகளின் போக்குவரத்து மீதான வரிகள் 12%-லிருந்து 5% ஆக குறைக்கப்படும்

எலக்ட்ரிக் வாகனங்கல், பேட்டரி பேக் பொருத்தப்பட்டாலும், இல்லாவிட்டாலும் 5% ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்