Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

குறைந்த வட்டியில் பெர்சனல் லோன் வாங்கணுமா.? அப்ப இந்த பேங்க் போங்க... | Low Interest Personal Loan Bank List

Gowthami Subramani Updated:
குறைந்த வட்டியில் பெர்சனல் லோன் வாங்கணுமா.? அப்ப இந்த பேங்க் போங்க...  | Low Interest Personal Loan Bank ListRepresentative Image.

நவீன காலத்தில், வங்கியில் கடன் வாங்குவது என்பது சாதாரணமாகி விட்டது. அதே போல, வங்கிகளும், நிதி நிறுவனங்களும் எல்லா வகையான கடன்களையும் வழங்கி வருகின்றன. அந்த வகையில், சாதாரண மக்களும் தங்களின் தேவைக்காக பர்சனல் லோனையே அணுகுகின்றனர். வீட்டுக் கடன், தொழில் கடன் உள்ளிட்டவைகளை விட, இந்த பெர்சனல் லோன் வாங்குவது என்பது எளிதான ஒன்று. ஏனெனில், பெர்சனல் லோன் பெற விரும்புபவர்கள், குறைந்த ஆவணங்களைச் சமர்ப்பித்தால் மட்டும் போதுமானது.

குறைந்த வட்டியில் பெர்சனல் லோன் வாங்கணுமா.? அப்ப இந்த பேங்க் போங்க...  | Low Interest Personal Loan Bank ListRepresentative Image

வட்டி அதிகம்

மற்ற கடன்களுடன் ஒப்பிடும் போது, பெர்சனல் லோன் பெறுபவர்களுக்கு வட்டி அதிகம் என்றே கூறப்படுகிறது. எனவே, குறைவான வட்டியில் பெர்சனல் லோன் பெற நினைப்பவர்களுக்கு ஒவ்வொரு வங்கிகள் முறைய தனி நபர் வட்டி விகிதங்களை தனித்தனியே கொண்டுள்ளன. இதில், பெர்சனல் லோன் தரக்கூடிய வங்கிகள் மற்றும் அவை தரும் வட்டி விகிதம் குறித்த விவரங்களைக் காணலாம்.

குறைந்த வட்டியில் பெர்சனல் லோன் வாங்கணுமா.? அப்ப இந்த பேங்க் போங்க...  | Low Interest Personal Loan Bank ListRepresentative Image

முதலிடத்தில் உள்ள வங்கி ஹெச் டி எஃப் சி வங்கி. இந்த வங்கியானது, ஆண்டுக்கு 10.50% முதல் 21% வரையிலான வட்டி விகிதத்தில் பெர்சனல் லோனை வழங்குகிறது. இந்த வங்கியில், அதிகபட்சமாக 15 லட்சம் ரூபாய் வரை கடன் பெறலாம். மேலும், 12 முதல் 60 மாதங்களில் அதாவது 1 முதல் 5 ஆண்டுக்குள் கடனைத் திரும்ப செலுத்த வேண்டும் எனக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து இரண்டாம் இடத்தில் உள்ள டர்போ லோன் சோழமண்டலம் ஃபைனான்ஸில் வழங்கப்படுகிறது. இதில் 5 லட்சம் ரூபாய் வரையிலான கடன் பெறலாம். ஆண்டு தோறும் வட்டி விகிதம் 15% ஆகவும், கடனை 12 முதல் 48 மாதங்களில் திரும்ப செலுத்தலாம் எனவும் கூறப்படுகிறது.

குறைந்த வட்டியில் பெர்சனல் லோன் வாங்கணுமா.? அப்ப இந்த பேங்க் போங்க...  | Low Interest Personal Loan Bank ListRepresentative Image

மூன்றாம் இடத்தில் உள்ள வங்கி எஸ்பிஐ வங்கி. இந்த வங்கியானது இரண்டு வகையான பெர்சனல் லோனை வழங்குகிறது. ஒன்று எஸ்பிஐ கிரெடிட் கடன் மற்றும் மற்றொன்று எஸ்பிஐ பெர்சனல் லோன்/ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் கடன்.

எஸ்பிஐ கிரெடிட் கடன்

இதில், எஸ்பிஐ வங்கியில் கிரெடிட் கார்டு மூலம் கடன் வழங்கப்படுகிறது. இதற்கான வயது வரம்பு 21-60 ஆகும். கடன் வரம்பு ரூ.25,000 முதல் ரூ.20 லட்சம் ரூபாய் வரை பெறலாம். கடன் திரும்பிக் கொடுக்க கால அவகாசம் 60 மாதம் ஆகும்.

எஸ்பிஐ பெர்சனல் லோன்/ஓய்வூதியதாரர்களுக்கான கடன்

இந்த வகை கடனுக்கு, ஆண்டு தோறும் வட்டி விகிதம் 9.75% முதல் 10.25% வரை இருக்கும். இதற்கான வயது வரம்பு 21 முதல் 76 ஆண்டுகள் ஆகும். மேலும், 25,000 ரூபாய் முதல் 14 லட்சம் வரை கடனாகப் பெறலாம். இதற்கான கால அவகாசம் 84 மாதம் வரை கிடைக்கிறது.

குறைந்த வட்டியில் பெர்சனல் லோன் வாங்கணுமா.? அப்ப இந்த பேங்க் போங்க...  | Low Interest Personal Loan Bank ListRepresentative Image

அடுத்து நான்காவது இடத்தில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி, வட்டி விகிதத்தை 8.7% முதல் 14.25% வரை கொண்டிருக்கிறது. வயது வரம்பு 21 முதல் 60 ஆண்டுகள் வரை ஆகும். விதிமுறைகளைப் பொறுத்து கடன் வழங்கப்படும். அதன் படி, ரூ.50,000 முதல் ரூ.10 லட்சம் வரை பெறலாம் அல்லது கிடைக்கும் வருமானத்தில் 20 மடங்கு கடனாகப் பெறலாம்.

பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு அடுத்த இடத்தில் இருப்பது ஆக்ஸிஸ் வங்கி ஆகும். இதற்கான வட்டி விகிதம் 12% முதல் 21% வரை கொடுக்கப்படுகிறது. மேலும், குறைந்தபட்ச வருமானம் ரூ.15,000 இருக்க வேண்டும். கடன் அளவு, ரூ.50,000 முதல் ரூ.15 லட்சம் வரையில் உள்ளது. மேலும், இதைத் திரும்ப செலுத்துவதற்கான கால அவகாசம் 12 முதல் 60 மாதங்கள் வழங்கப்படுகிறது.

குறைந்த வட்டியில் பெர்சனல் லோன் வாங்கணுமா.? அப்ப இந்த பேங்க் போங்க...  | Low Interest Personal Loan Bank ListRepresentative Image

இதற்கு அடுத்த இடத்தில் உள்ள கனரா வங்கியானது, எஸ்பிஐ-யைப் போல இரண்டு வகையான கடன்களை வழங்குகிறது.

கனரா வங்கி டீச்சர்ஸ் பர்சனல் லோன்

இந்த வகை கடன்களுக்கு வட்டி விகிதமானது 12.40% வரை வழங்கப்படுகிறது. மேலும், வயது வரம்பு 21 முதல் 60 ஆண்டுகள் வரை. இந்தக் கடன் பெறுவதற்கான குறைந்தபட்ச வருமானம் ரூ.10,000 ஆகும். இதில், லோன் பெற நினைப்பவர்கள், 3 லட்சம் ரூபாய் அல்லது 10 மாதங்களுக்கான மொத்த சம்பளத்தில் குறைவாக தொகையைப் பெறலாம். மேலும், இதனை 48 மாதங்களுக்குள் திரும்ப செலுத்தி விட வேண்டும்.

இரண்டாவதாக பட்ஜெட் பெர்சனல் லோன்

கனரா வங்கி அளிக்கக் கூடிய பட்ஜெட் பெர்சனல் லோனின் வட்டி விகிதம் ஆண்டு தோறும் 11.30% முதல் 12.30 ஆகும். வங்கியின் விருப்பப்படியே வயது வரம்பு அமைகிறது. கடன் பெறும் தொகை 3 லட்சம் ரூபாய் அல்லது 6 மாதங்களுக்கான மொத்த சம்பளத்தில் எது குறைவோ அந்தத் தொகையைப் பெறலாம். கடன் கால அவகாசம் 60 மாதங்கள் வரை உள்ளது.

குறைந்த வட்டியில் பெர்சனல் லோன் வாங்கணுமா.? அப்ப இந்த பேங்க் போங்க...  | Low Interest Personal Loan Bank ListRepresentative Image

மஹேந்திரா பைனான்ஸ் வங்கியானது கனரா வங்கிக்கு அடுத்த இடத்தில் உள்ளது. இந்த வங்கியில் பெர்சனல் லோன் பெறுவதற்கான வயது வரம்பு 21 முதல் 58 வயது வர ஆகும். மேலும், வட்டி விகிதம் ஆண்டுக்கு 26% என்ற கணக்கில் உள்ளது. கடன் வரம்பாக 3 லட்சம் வரை வழங்கப்படுகிறது. இதனைத் திருப்பிச் செலுத்துவதற்கான கால அளவு 3 ஆண்டுகள் வரையாக உள்ளது.

இதற்கு அடுத்த இடத்தில் இருக்கும் ஐடிபிஐ வங்கியானது வருடத்திற்கு 8.15% முதல் 10.9% வரையிலான வட்டி விகிதத்தை அளிக்கிறது. இதற்கான வயது வரம்பு 21 முதல் 60 ஆண்டுகள் ஆகும். குறைந்தபட்ச வருமானமாக ரூ.15,000-ஐப் பெற்றிருக்க வேண்டும். கடன் அளவு 3 லட்சம் வரையில் பெறலாம். திரும்பச் செலுத்தும் கால அளவு 3 ஆண்டுகள் ஆகும்.

குறைந்த வட்டியில் பெர்சனல் லோன் வாங்கணுமா.? அப்ப இந்த பேங்க் போங்க...  | Low Interest Personal Loan Bank ListRepresentative Image

ஐடிபிஐ-க்கு அடுத்த இடத்தில் உள்ள வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பெர்சனல் கடனுக்கான வட்டி விகிதம் 10.80% முதல் உள்ளது. இதற்கான வயது வரம்பு 21 முதல் 60 ஆண்டுகள் ஆகும். இதன் குறைந்தபட்ச வருமானம் ரூ.5,000-க்கு மேல் இருக்க வேண்டும். இதன் மூலம், ரூ. 5 லட்சம் வரை கடன் பெறலாம். இந்த வங்கியில் கொடுத்த கடனைத் திரும்பி செலுத்துவதற்கான கால அவகாசம் 60 மாதம் ஆகும்.

பெர்சனல் லோன் பெற நினைப்பவர்கள், மேலே கூறப்பட்ட வங்கிகளில் தங்களது தகுதியினைச் சரிபார்த்து, அதற்கு ஏற்றாற் போல, கடன் பெறலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்