Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கூகுள் பே உள்ளிட்ட டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்கப்படுமா…? நிதித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!

Gowthami Subramani August 22, 2022 & 10:50 [IST]
கூகுள் பே உள்ளிட்ட டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்கப்படுமா…? நிதித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!Representative Image.

டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்குக் கட்டணங்கள் வசூலிக்கப்படுவது குறித்த கருத்துகளுக்கு, இந்திய ரிசர்வ் வங்கி தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அதன் படி, இந்த யூபிஐ மூலம் பணம் செலுத்துவதற்கு, அரசாங்கம் திட்டமிடவில்லை என தெரிவித்துள்ளது.

யுபிஐ பரிவர்த்தனை

UPI பொதுவாக மக்களுக்கு அளிக்கப்படும் அபரிமிதமான வசதியைக் கொண்ட மக்கள் அனைவராலும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் டிஜிட்டல் பொருளாகும். இந்த சேவைகளுக்காக, அரசாங்கத்தில் கட்டணத்தை வசூலிப்பதற்கு எந்தப் பரிசீலனையும் செய்யப்படவில்லை. மேலும், கடந்த ஆண்டு இந்த டிஜிட்டல் கட்டணச் சூழலுக்கு, அரசு நிதியுதவி வழங்கியுள்ளது. அதே போல, இந்த ஆண்டும் கொடுப்பனவுகள் ஏற்றுக் கொள்வதை ஊக்குவிப்பதாகவும் அரசு அறிவித்துள்ளது.

MDR என்றால் என்ன?

கடந்த 2020 ஜனவரி மாதத்தில், UPI மற்றும் உள்நாட்டில் ரூபே டெபிட் கார்டு பரிவர்த்தனைகள் மீது வணிகத் தள்ளுபடி விகிதம் திரும்பப் பெறப்பட்டது. இதன் மூலம், UPI பயன்படுத்துவோர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதில் MDR என்பது, வங்கி, நெட்வொர்க் அட்டைகள், பாயின்ட் ஆஃப் சேல் வழங்குநருக்கு, ஆஃப்லைன் பரிவர்த்தனைகள், மற்றும் ஆன்லைனில் அவற்றை கொள்முதல் செய்வதற்கான கட்டண நுழைவாயில்களுக்கு வணிகரால் செலுத்தப்படக் கூடிய கட்டணமாகும்.

மறுபரிசீலனை செய்தல்

இது சர்ச்சைக்குரிய பிரச்சனையாக மாறியது. இதன் மூலம், புதுமையாக கொண்டுவரும் அமைப்புகளுக்குத் தடை உண்டாகும். அது மட்டுமல்லாமல், இதன் உள்கட்டமைப்பு ஆதரிக்க மற்றும் மேம்படுத்த போதுமான அளவு நிதி இல்லாத காரணத்தினால், இதனை மறுபரிசீலனை செய்து முடிவெடுக்குமாறு அரசுக்கு வலியுறுத்தப்பட்டது.

பரிவர்த்தனை கட்டணத்தால் ஏற்படும் விளைவுகள்

தற்போது, கூகுல் பே, ஃபோன் பே உள்ளிட்ட டிஜிட்டல் பரிவர்த்தனைகள் பெரும்பாலும் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2016 ஆம் ஆண்டு இருந்ததைக் காட்டிலும், தற்கால நடைமுறைகளில் அனைத்து இடங்களிலும் இந்த பரிவர்த்தனை முறை உபயோகப்படுத்தப்படுகிறது.

இந்த நிலையில், இந்தப் பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் வசூலிக்கப்படும் போது, இந்தப் பரிவர்த்தனைகளை உபயோகப் படுத்துபவர்களின் எண்ணிக்கைக் குறைய ஆரம்பிக்கும்.

மேலும், தற்போதைய பொருளாதார நெருக்கடியால் மக்கள் பல்வேறு விளைவுகளைச் சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த டிஜிட்டல் பரிவர்த்தனைக்கும் கட்டணம் செலுத்துவதால், மக்கள் இயல்பு நிலைக்குக் கீழ் செல்லப்படுவர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்