Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Free Coaching Classes with Stipends: உதவித் தொகையுடன் இலவச பயிற்சி…! மத்திய அரசின் மகத்தான வாய்ப்பு….!

Gowthami Subramani June 10, 2022 & 15:30 [IST]
Free Coaching Classes with Stipends: உதவித் தொகையுடன் இலவச பயிற்சி…! மத்திய அரசின் மகத்தான வாய்ப்பு….!Representative Image.

Free Coaching Classes with Stipends: தேசிய தொழில் சேவை மையம் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகத்தின் கீழ், இலவச பயிற்சி தரப்பட உள்ளது. இதில், எந்தெந்த பயிற்சிகள், யார் விண்ணப்பிக்கலாம் போன்ற முழு தகவல்களும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்தி, பயிற்சி பெற விரும்பும் நபர்கள் அரசின் இலவச பயிற்சித் திட்டத்தில் கலந்து கொள்ளலாம். மேலும், இதில் பயிற்சியுடன் கூடுதலாக உதவித் தொகையும் கிடைக்கும் (Free Coaching Classes with Stipends).

SC / STபிரிவினருக்கான உதவித் தொடையுடன் கூடிய இலவச பயிற்சி

பயிற்சியின் பெயர்

SC / ST – பிரிவினருக்கான இலவச பயிற்சி

பயிற்சிக்காலம்

11 மாதங்கள்

உதவித் தொகை

ஒரு பயிற்சியாளருக்கு, மாதம் ரூ.1000 வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் ஆதார் எண்ணுடன் செயலில் உள்ள வங்கிக் கணக்கை NCS போர்ட்டலில் பதிவு செய்ய வேண்டும்.

புத்தகங்கள் மற்றும் எழுது பொருள்கள்

ஒரு பயிற்சியாளருக்கு 1000 ரூபாய் மதிப்பிலான புத்தகம் மற்றும் எழுது பொருள்கள் இலவசமாக வழங்கப்படும்

பயிற்சிக்கான கட்டணம்

இலவசம்

பயிற்சி தொடங்கப்படும் நாள்

ஜூலை 1, 2022

கல்வித் தகுதி

பயிற்சியில் சேர விரும்புவோர், ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட வாரியம்/பல்கலைக்கழகத்திலிருந்து 10+2 அல்லது அதற்கு சமமான ((ஆங்கிலத்தை பாடமாகக் கொண்ட) படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு

ஜூலை 1, 2022 ஆம் நாளின் படி, 27 வயதைக் கொண்டிருப்பவராக இருக்க வேண்டும்.

 

NIELIT அல்லது அதன் அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள் மூலம் “O” நிலை ஓராண்டு கணினிப் பயிற்சி (Upcoming Free Coaching Class).

பயிற்சியின் பெயர்

“O” நிலை ஓராண்டு கணினிப் பயிற்சி

உதவித் தொகை

ஒரு பயிற்சியாளருக்கு, மாதம் ரூ.1000 வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் ஆதார் எண்ணுடன் செயலில் உள்ள வங்கிக் கணக்கை NCS போர்ட்டலில் பதிவு செய்ய வேண்டும்.

குடும்ப ஆண்டு வருமானம்

ரூ. 3 லட்சம் / ஆண்டு

பயிற்சிக்கான கட்டணம்

இலவசம்

பயிற்சி தொடங்கப்படும் நாள்

ஜூலை 1, 2022

கல்வித் தகுதி

குறைந்தபட்சம் 10+2 அல்லது அதற்கு மேல் பட்டப்படிப்பு அளவில் கணினியை பாடங்களில் ஒன்றாக தேர்வு செய்யாத SC/ST விண்ணப்பதாரர்கள் மட்டுமே இதில் தேர்வு செய்யப்படுவார்கள்.

வயது வரம்பு

ஜூலை 1, 2022 ஆம் நாளின் படி, 18-30 வயதைக் கொண்டிருப்பவராக இருக்க வேண்டும்.

 

NIELIT அல்லது அதன் அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள் மூலம் '0' நிலை ஓராண்டு கணினி வன்பொருள் பராமரிப்புப் பயிற்சி (COMPUTER HARDWARE MAINTENANCE TRAINING)

பயிற்சியின் பெயர்

'0' நிலை ஓராண்டு கணினி வன்பொருள் பராமரிப்புப் பயிற்சி

உதவித் தொகை

ஒரு பயிற்சியாளருக்கு, மாதம் ரூ.1000 வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் ஆதார் எண்ணுடன் செயலில் உள்ள வங்கிக் கணக்கை NCS போர்ட்டலில் பதிவு செய்ய வேண்டும்.

குடும்ப ஆண்டு வருமானம்

ரூ. 3 லட்சம் / ஆண்டு

பயிற்சிக்கான கட்டணம்

இலவசம்

பயிற்சி தொடங்கப்படும் நாள்

ஜூலை 1, 2022

கல்வித் தகுதி

குறைந்தபட்ச கல்வித் தகுதி: 10 + 2 தேர்ச்சி அல்லது ஐடிஐ (10 தேர்ச்சிக்கு ஒரு வருடம்), டிப்ளமோ, பட்டப்படிப்பு, முதுகலை அல்லது முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

ஜூலை 1, 2022 ஆம் நாளின் படி, 18-30 வயதைக் கொண்டிருப்பவராக இருக்க வேண்டும்.

 

எப்படி விண்ணப்பிப்பது? (How to Apply Free Coaching in NCS)

SC / ST களுக்கான தேசிய தொழில் சேவை மையத்தின் Sub-Region Employment Officer-இடம் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பத்தைப் பெறலாம்.

மேலும், இதனுடன் வேலைவாய்ப்புப் பதிவு அட்டையின் அசல் மற்றும் கல்வி சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் சாதிச் சான்றிதழ் விண்ணப்பங்கள் இருக்க வேண்டும். மேலும், இந்த செய்தி அறிவிக்கப்பட்ட 7 நாட்களுக்குள் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தகுதி / தேர்வுகள் மற்றும் நேர்காணல் செயல்திறன் போன்றவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

மேலே கூறப்பட்ட பயிற்சிகளுக்கு SC /  ST பிரிவினர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரியும், பயிற்சி நடத்தப்படும் இடங்களும் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

பயிற்சிக்கான அறிவிப்பைப் பெற வேண்டிய இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்