Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Gold News Today in Tamil: இரண்டாவது நாளாக அதிரடியாகக் குறைந்த தங்கத்தின் விலை…! எவ்வளவு தெரியுமா..?

Gowthami Subramani June 29, 2022 & 18:20 [IST]
Gold News Today in Tamil: இரண்டாவது நாளாக அதிரடியாகக் குறைந்த தங்கத்தின் விலை…! எவ்வளவு தெரியுமா..?Representative Image.

Gold News Today in Tamil: தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது. இந்த நிலையில், நேற்று (ஜூன் 28) தங்கத்தின் விலை குறைந்ததைத் தொடர்ந்து, இன்றும் குறைந்துள்ளது (Gold News Today in Tamil).

தங்கத்தின் விலை எப்போது குறையும் என்று எண்ணிக் கொண்டிருப்பவர்களின் மத்தியில், தினந்தோறும் மாறு வீதத்திலேயே தங்கம் இருந்து வந்துள்ளது. அதன் படி, இந்த மாதத்தின் தொடக்கத்தில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.37,920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால், மறுநாலே ரூ. 160 உயர்ந்து 38,000 க்கும் அதிகமாக வந்தது.

அதன் பிறகு, படிப்படியாக ஏறு அல்லது இறங்கு முகத்திலேயே இருந்த தங்கத்தின் விலை கடந்த ஜூன் மாதம் 14 ஆம் நாள், அதிரடியாக ரூ.760 குறைந்தது. இதனையடுத்து, ரூ.37,920 -க்கு தங்கம் விற்பனை செய்யப்பட்டது. இவ்வாறு இறக்கத்திற்கு வந்த தங்கத்தின் விலையால் வாடிக்கையாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர் (Gold News Today Tamil).

இதனை அடுத்து, சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை 80 ரூபாய் குறைந்து சவரன் ஒன்றுக்கு ரூ.38,120 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. இவ்வாறு கிராமுக்கு ரூ. 10 குறைந்து ஒரு கிராம் ரூ.4,675-க்கு விற்பனையானது (Gold Rate Today in Tamil).

இவ்வாறு இரண்டாவது நாளாக இன்றும் தங்கத்தின் விலை ரூ.256 அதிரடியாகக் குறைந்துள்ளது. அதன் படி, சவரன் ஒன்றுக்கு ரூ.37,000 க்குக் கீழ் குறைந்தும், கிராமுக்கு 32 ரூபாய் குறைந்தும் விற்பனை செய்யப்படுகிறது. அதன் படி, இரண்டாவது நாளாக அதிக அளவில் தங்கத்தின் விலை குறைந்துள்ளதால், வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர் (Today Gold Rate in Tamil).

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் தங்கத்தின் விலை