Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நேற்று சரிந்த இன்று மீண்டும் உயர்ந்த தங்கத்தின் விலை.! அட்சய திருதியை தினத்தின் எதிரொளியா.?

Gowthami Subramani Updated:
நேற்று சரிந்த இன்று மீண்டும் உயர்ந்த தங்கத்தின் விலை.! அட்சய திருதியை தினத்தின் எதிரொளியா.?Representative Image.

நேற்றைய தினத்தின் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.120 சரிந்த நிலையில், இன்று மீண்டும் ஏற்றமடைந்துள்ளது.

கடந்த சில நாள்களாகவே, தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்திலேயே இருந்து வருகிறது. அதன் படி, நேற்று ஒரே நாளில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த சரிவு தொடரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று மீண்டும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.

அதன் படி, 22 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு 15 ரூபாய் அதிகரித்து 5,665 ரூபாயாக உள்ளது. தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.45,320 ரூபாயாக உள்ளது.

24 காரட் தங்கத்தின் விலை ரூ.15 உயர்ந்து ரூ.6,112 ஆகவும், 8 கிராம் தங்கத்தின் விலை ரூ.48,896 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில், வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. அதன் படி, வெள்ளியின் விலை கிராம் ஒன்றிற்கு 30 காசுகள் உயர்ந்து ரூ.81.30 ஆக உள்ளது. மேலும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.300 அதிகரித்து ரூ.81,300 ஆக உள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் தங்கத்தின் விலை