Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

குஜராத்தில் லித்தியம்-அயன் செல்கள் உற்பத்தி....டாடா குழுமம் ரூ.13,000/- கோடி திட்டம்

Priyanka Hochumin Updated:
குஜராத்தில் லித்தியம்-அயன் செல்கள் உற்பத்தி....டாடா குழுமம் ரூ.13,000/- கோடி திட்டம்Representative Image.

இந்தியாவின் முன்னணி நிறுவனமான டாடா குழுமம் குஜராத்தில் லித்தியம்-அயன் செல்கள் உற்பத்தி செய்யும் ஜிகா தொழிற்சாலையை அமைக்கும் திட்டத்தை வெள்ளிக்கிழமை அறிவித்தது.

இந்த திட்டத்தின் ஆரம்ப கட்டத்தில், ரத்தன் டாடா ஆதரவு குழு ரூ.13,000 கோடி செலுத்தும். மேலும் நாட்டின் சொந்த மின்சார வாகன விநியோகச் சங்கிலியை உருவாக்குவதற்கான உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக இந்த வளர்ச்சி உள்ளது என்று அறிவித்தனர். டாடா குழுமத்தின் துணை நிறுவனமான அக்ரடாஸ் எனர்ஜி ஸ்டோரேஜ் சொல்யூஷனுக்கும் குஜராத் அரசுக்கும் இடையே ஜூன் 2 ஆம் தேதி புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து குஜராத் மாநில அரசாங்கத்தின் அதிகாரி விஜய் நெஹ்ரா, ராய்ட்டர்ஸிடம், "இந்த ஆலை குஜராத் மற்றும் இந்தியாவில் EV சுற்றுச்சூழல் அமைப்பின் வளர்ச்சிக்கு பங்களிக்கும்" என்று கூறினார். இவ்வளோ பெரிய திட்டம் வடக்கு குஜராத்தின் சனந்த் பகுதியில் தொடங்க இருக்கிறது. அதனின் முதல் கட்டத்தில், ஆலை 20 ஜிகாவாட் மணிநேரம் (GWh) ஆரம்ப உற்பத்தி திறனைக் கொண்டிருக்கும். இரண்டாம் கட்டத்தில் அதன் உற்பத்தி திறன் இரட்டிப்பாகும் என கூறப்படுகிறது. ஆக மொத்தில் இத்திட்டம் மூன்று ஆண்டுகளுக்குள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்