Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

ஆஹா... தங்கத்தை வாங்கி குவிக்கும் நேரம் இது தான்.. உற்சாகத்தில் இல்லத்தரசிகள்..

Gowthami Subramani October 28, 2022 & 10:30 [IST]
ஆஹா... தங்கத்தை வாங்கி குவிக்கும் நேரம் இது தான்.. உற்சாகத்தில் இல்லத்தரசிகள்..Representative Image.

ஏற்ற இறக்கத்துடன் கூடிய தங்கத்தின் விலை, கடந்த இரண்டு நாள்களாக குறைந்து வருவதால், மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். தங்கத்தின் விலை நேற்று குறைந்திருந்த நிலையில், இன்றும் அதன் விலை குறைந்துள்ளது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

கடந்த சில நாள்களாகவே, தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்திலேயே இருந்து வருகிறது. தொடர்ந்து இரு நாள்களாக தங்கத்தின் விலை சரிந்து வருவதால், இல்லத்தரசிகள் மிகுந்த ஆனந்தத்தில் உள்ளனர். இது தங்கம் வாங்குபவர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்துகிறது.

ஏற்ற இறக்கத்திலேயே இருக்கும் தங்கத்தின் விலை, இன்று சவரனுக்கு ரூ.37,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய தினத்தில் அதாவது அக்டோபர் 28 ஆம் நாளின் நிலவரப்படி, ஆபரணத் தங்கம் (24 காரட்) ஒரு கிராமிற்கு ரூ.10 குறைந்து 4,735 ரூபாயாகவும், ஒரு சவரனுக்கு ரூ.80 குறைந்து 37,880 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், தூய தங்கம் (24 காரட்) ஒரு கிராமிற்கு 5,137 ரூபாயாகவும், ஒரு சவரனுக்கு ரூ.41,096 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை குறைந்த நிலையில், இன்று வெள்ளியின் விலை சற்று உயர்ந்துள்ளது. அதன் படி, ஒரு கிராமிற்கு 20 காசுகள் அதிகரித்து ரூ.63.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிலோ வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.63,700 ஆக விற்பனை செய்யப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் தங்கத்தின் விலை