Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அடுத்தடுத்த ஐடி நிறுவனங்களில் ஊழியர்கள் பணிநீக்கம்...HP-யில் இருந்து 6000 பேர்...அடுத்து இங்கையுமா?

Priyanka Hochumin Updated:
அடுத்தடுத்த ஐடி நிறுவனங்களில் ஊழியர்கள் பணிநீக்கம்...HP-யில் இருந்து 6000 பேர்...அடுத்து இங்கையுமா?Representative Image.

தொடர்ந்து தங்கள் நிறுவனத்தின் ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் பட்டியலில் முன்னணி டெக் நிறுவனமான ஹெச்பியும் இடம் பெற்றுள்ளது.  நிறுவனத்தின் செலவுகளைக் குறைக்க சுமார் 6000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்ததாக கூறுகின்றனர். இந்த அறிவிப்பிற்கான காரணம் தொடர் சரிவில் இருக்கும் நிறுவனத்தின் பங்கை மீட்டெடுப்பது தான். ஹெச்பி நிறுவனத்தின் இந்த அறிவிப்பிற்கு பின்னர் செவ்வாயன்று வர்த்தகத்தில் 1 சதவீதம் வளர்ச்சியடைந்ததாக கூறப்படுகிறது.

அடுத்தடுத்த ஐடி நிறுவனங்களில் ஊழியர்கள் பணிநீக்கம்...HP-யில் இருந்து 6000 பேர்...அடுத்து இங்கையுமா?Representative Image

கொரோனா காலத்தில் விற்பனையில் டாப்ல இருந்தது ஹெச்பி நிறுவனம். அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு வொர்க் ப்ரம் ஹோம், ஸ்கூல் படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் கிளாஸ் மற்றும் வீட்டில் இருந்து கேம் விளையாடும் இளைஞர்கள் என்று அனைவருக்கும் லேப்டாப் அல்லது சிஸ்டம் அவசியமானதாக மாறியது. அந்த சமயத்தில் அவர்களின் விற்பனை அதிகளவில் இருந்தது. அந்த காலம் அப்படியே மாறி தற்போது அவர்களின் வர்த்தகம் தொடர் சரிவில் உள்ளது. இதன் காரணமாகத் தான் ஊழியர்களை பணிநீக்கம் செய்து செலவுகளைக் குறைக்க திட்டமிட்டுள்ளனர்.

அடுத்தடுத்த ஐடி நிறுவனங்களில் ஊழியர்கள் பணிநீக்கம்...HP-யில் இருந்து 6000 பேர்...அடுத்து இங்கையுமா?Representative Image

இதனால் அடுத்த 3 வருடத்தில் 4000 முதல் 6000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளனர். இதன் அடிப்படையில் ஒரு வருடத்திற்கு 1500 முதல் 2000 வரை ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள். இது போன்ற நடவடிக்கையை மெட்டா, மைக்ரோசாப்ட், சேல்ஸ்போர்ஸ் ஆகிய நிறுவனங்களும் இதே முடிவுகளை எடுத்துள்ளனர். ஹெச்பி எடுத்த இந்த முடிவால் அடுத்த 3 வருடத்தில் 1.4 பில்லியன் டாலர் சேமிக்க முடியும் என அறிவித்துள்ளது.

அடுத்தடுத்த ஐடி நிறுவனங்களில் ஊழியர்கள் பணிநீக்கம்...HP-யில் இருந்து 6000 பேர்...அடுத்து இங்கையுமா?Representative Image

சமீபத்தில் கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட், Poor Performing பிரிவில் இருக்கும் 6 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக கூறினர். இதுவரை ஒழுங்கா வேலை செய்யலைன்னா பணிநீக்கம் செய்யப்படும் என்று எச்சரிக்கை மட்டும் விடப்பட்டுள்ளது. ஆனால் சுந்தர் பிச்சை தலைமையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. என்ன நடக்கும் என்று தெரியவில்லை. இவர்களுக்கு முன்பு பிரபல நிறுவனமான டிஜிட்டல் கம்யூனிகேஷன்ஸ் டெக் நிறுவனங்களில் ஒன்றான சிஸ்கோ, தனது மொத்த ஊழியர்களில் 5 சதவீதம் பேர் அதாவது 4000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக அறிவித்தது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்