Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நேத்து மிஸ் பண்ணீட்டீங்களா..? இன்னைக்கும் தாராளமா தங்கம் வாங்கலாம்…

Gowthami Subramani November 02, 2022 & 11:55 [IST]
நேத்து மிஸ் பண்ணீட்டீங்களா..? இன்னைக்கும் தாராளமா தங்கம் வாங்கலாம்…Representative Image.

ஏற்ற இறக்கத்துடன் கூடிய தங்கத்தின் விலை, நேற்று சவரனுக்கு ரூ.80 குறைந்த நிலையில், இன்று அதே விலையில் நீட்டிக்கிறது. இது தங்கம் வாங்குபவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாள்களாகவே, தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்திலேயே இருந்து வருகிறது. தங்கத்தின் விலை எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.

ஏற்ற இறக்கத்திலேயே இருக்கும் தங்கத்தின் விலை, இன்று சவரனுக்கு ரூ.37,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய தினத்தில் அதாவது நவம்பர் 02 ஆம் நாளின் நிலவரப்படி, ஆபரணத் தங்கம் (22 காரட்) ஒரு கிராமிற்கு ரூ.4,705 ரூபாயாகவும், ஒரு சவரனுக்கு ரூ.80 குறைந்து 37,640 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், தூய தங்கம் (24 காரட்) ஒரு கிராமிற்கு 5,107 ரூபாயாகவும், ஒரு சவரனுக்கு ரூ.40,856 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் அதே விலையில் நீடிக்கும் நிலையில், வெள்ளியின் விலை இன்று சரிவைக் கண்டுள்ளது. அதன் படி, ஒரு கிராமிற்கு 50 காசுகள் குறைந்து வெள்ளியின் விலை ரூ.64.50 ஆகவும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.64,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் தங்கத்தின் விலை