Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பெண்களுக்கு சற்று நிம்மதி… இன்று சரிந்த தங்கத்தின் விலை…!

Gowthami Subramani Updated:
பெண்களுக்கு சற்று நிம்மதி… இன்று சரிந்த தங்கத்தின் விலை…!Representative Image.

ஏற்ற இறக்கத்துடன் கூடிய தங்கத்தின் விலை, இன்று சரிந்துள்ளதால் இல்லத்தரசிகள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

கடந்த சில நாள்களாகவே, தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்திலேயே இருந்து வருகிறது. அதன் படி, கடந்த மூன்று நாள்களாக தங்கத்தின் விலை அதிகரித்த நிலையில், இல்லத்தரசிகள் கவலையில் இருந்தனர். இந்நிலையில், தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளதால் பெண்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

தங்கத்தின் விலை, கடந்த மூன்று நாள்களாக கடும் ஏற்றத்திலேயே இருந்து வந்தது. இன்று தங்கத்தின் விலை சற்று சரிந்து காணப்படுகிறது.

ஏற்ற இறக்கத்திலேயே இருக்கும் தங்கத்தின் விலை, இன்று சவரனுக்கு ரூ.39,400 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய தினத்தில் அதாவது நவம்பர் 26 ஆம் நாளின் நிலவரப்படி, ஆபரணத் தங்கம் (22 காரட்) ஒரு கிராமிற்கு ரூ.10 குறைந்து ரூ.4,935 லிருந்து ரூ.4925 ரூபாயாகவும், ஒரு சவரனுக்கு ரூ.80 குறைந்து 39,400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், தூய தங்கம் (24 காரட்) ஒரு கிராமிற்கு 5,337 ரூபாயிலிருந்து 5,327 ரூபாய்க்கும் ஒரு சவரனுக்கு ரூ.42,696 லிருந்து 42,616 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை குறைந்த நிலையில், வெள்ளி விலையும் இன்று சற்று குறைந்துள்ளது அதன் படி, ஒரு கிராம் வெள்ளியின் விலை 0.50 பைசா குறைந்து ரூ.67.50 ஆகவும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.67,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் தங்கத்தின் விலை