Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வாரத்தின் முதல் நாளே குறைந்த தங்கம்.. குஷியில் இல்லத்தரசிகள்…!

Gowthami Subramani Updated:
வாரத்தின் முதல் நாளே குறைந்த தங்கம்.. குஷியில் இல்லத்தரசிகள்…!Representative Image.

ஏற்ற இறக்கத்துடன் கூடிய தங்கத்தின் விலை, இன்று சரிந்துள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

கடந்த சில நாள்களாகவே, தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்திலேயே இருந்து வருகிறது. அதன் படி, கடந்த வார இறுதியில் இறக்கத்தை நோக்கியே இருந்த தங்கம் இன்றும் சரிந்துள்ளது.

தங்கத்தின் விலை, கடந்த வார இறுதியில் சரிவை நோக்கி இருந்த நிலையில் இன்றும் சரிந்துள்ளது. இது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்ற இறக்கத்திலேயே இருக்கும் தங்கத்தின் விலை, இன்று சவரனுக்கு ரூ.39,368 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய தினத்தில் அதாவது நவம்பர் 28 ஆம் நாளின் நிலவரப்படி, ஆபரணத் தங்கம் (22 காரட்) ஒரு கிராமிற்கு ரூ.4 குறைந்து ரூ.4,925 லிருந்து ரூ.4921 ரூபாயாகவும், ஒரு சவரனுக்கு ரூ.32 குறைந்து 39,368 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், தூய தங்கம் (24 காரட்) ஒரு கிராமிற்கு 5,327 ரூபாயிலிருந்து 5,323 ரூபாய்க்கும் ஒரு சவரனுக்கு ரூ.42,616 லிருந்து 42,584 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை குறைந்த நிலையில், வெள்ளி விலையும் இன்று மாற்றமில்லாமல் அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் படி, ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.67.50 ஆகவும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.67,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் தங்கத்தின் விலை