Tue ,Apr 16, 2024

சென்செக்ஸ் 72,966.04
-433.74sensex(-0.59%)
நிஃப்டி22,158.20
-114.30sensex(-0.51%)
USD
81.57
Exclusive

2வது நாளாக தாறுமாறாக சரிந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் ஹேப்பி!!

Sekar Updated:
2வது நாளாக தாறுமாறாக சரிந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் ஹேப்பி!!Representative Image.

சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.640 குறைந்து ரூ.42,680க்கு இன்று விற்பனை செய்யப்படுகிறது.

மத்திய பட்ஜெட்டில் ஆபரண தங்கம், வெள்ளி மற்றும் வைரம் மீதான இறக்குமதி வரி உயர்த்தப்பட்டதன் எதிரொலியாக, நேற்று முன்தினம் தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ,720 உயர்ந்தது.

ஆனால் பட்ஜெட்டில் கூறப்பட்டதன் முழு அம்சங்களும் தெரியவந்த நிலையில், தங்கம் விலை நேற்று தாறுமாறாக சரிந்தது.

நேற்று தங்கம் விலை தடாலடியாக குறைந்தது. அதன்படி, சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 குறைந்து ரூ.5,440க்கும், ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.520 குறைந்து ரூ.43,520க்கும் விற்பனையானது.

இந்நிலையில், இன்று மீண்டும் தங்கள் விலை குறைந்துள்ளது. சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 குறைந்து ஒரு கிராம் ரூ.5,335க்கும், ஒரு சவரன் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.640 குறைந்து ரூ.42,680க்கும் விற்பனையாகிறது.

தொடர்ந்து தங்கம் விலை சரிந்து வருவது நகைப்பிரியர்களிடையே குஷியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, சென்னையில் வெள்ளியின் விலை, கிராமுக்கு ரூ.1.80 காசுகள் குறைந்து ரூ.74.20க்கு விற்பனையாகிறது. மேலும் ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.1,800 குறைந்து ரூ.74,200க்கு விற்பனையாகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் தங்கத்தின் விலை