Tue ,Apr 30, 2024

சென்செக்ஸ் 74,668.04
937.88sensex(1.27%)
நிஃப்டி22,643.40
223.45sensex(1.00%)
USD
81.57
Exclusive

வருமான வரி செலுத்தும் நபரா நீங்கள்…! அப்ப இனிமே உங்களுக்கு இந்த பென்சன் திட்டம் கிடையாது…

Gowthami Subramani August 11, 2022 & 17:30 [IST]
வருமான வரி செலுத்தும் நபரா நீங்கள்…! அப்ப இனிமே உங்களுக்கு இந்த பென்சன் திட்டம் கிடையாது… Representative Image.

வருமான வரி செலுத்தும் நபர்கள், வரும் அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி முதல் அடல் பென்சன் யோஜனா திட்டத்தில் சேர்ந்து பயன் பெற முடியாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது குறித்த மத்திய அரசு தெரிவித்த முழு விவரங்களையும் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

மத்திய அரசின் பென்சன் திட்டம்

மத்திய மாநில அரசு, பல்வேறு அரசு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், மத்திய அரசு வழங்கும் இந்த பென்சன் திட்டமும் ஒன்றாகும். இந்த திட்டட்தில் சேரும் நபர்களின் பங்களிப்புத் தொகையைப் பொறுத்து, 60 வயதுக்கு மேல் மாதந்தோறும் பென்சன் தொகை வழங்கப்படுகிறது. அதன் படி, அடல்ட் பென்சன் யோஜனா திட்டத்தின் கீழ் மாதந்தோறும் குறைந்தபட்சம் ரூ.1000 முதல் அதிகபட்சம் ரூ.5000 வரையிலான தொகையை ஓய்வூதியமாகப் பெறுகின்றனர்.

திட்டத்தில் சேர்ந்து பென்சன் தொகை பெறுவதற்கு இல்லாவிட்டால்

இந்த திட்டத்தில் சேர்ந்து முதலீடு செய்யும் நபர் இறந்து விட்டால், அவரது மனைவி இந்த ஓய்வூதியத்தினைப் பெறுவார். இதுவே, விண்ணப்பதாரர் அவரது மனைவி என இருவரும் இல்லாவிட்டால், 60 வயது வரை அவர்கள் சேர்த்த ஓய்வூதியம், அவர்கள் நியமனம் செய்யப்பட்ட நபருக்கு வழங்கப்படும்.

அரசின் முக்கிய அறிவிப்பு

இந்த நிலையில் அரசு அறிவித்த அறிக்கையின் படி, வருமான வரி செலுத்தும் நபர்கள், வரும் அக்டோபர் 1, 2022 ஆம் நாள் முதல் இந்த திட்டத்தில் இணைந்து பென்சன் தொகை பெறுவதற்குத் தகுதி பெற மாட்டார்கள்.

புதிய விதிகளின் படி, இந்த குறிப்பிடப்பட்ட அக்டோபர் 01, 2022 அல்லது அதற்குப் பின், இந்த திட்டத்தில் இணையும் நபர்கள், விண்ணப்பித்த தேதி அல்லது அதற்கு முன்னதாக வருமான வரி செலுத்தும் நபராக இருப்பதாகக் கண்டறியப்பட்டால் அவருக்கு பென்சன் கணக்கு முடிக்கப்படும். மேலும், இந்த நடவடிக்கைக்குப் பின்னர், அதுவரை அவர் செலுத்திய ஓய்வூதியத் தொகை திருப்பி செலுத்தப்படும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Pradhan Mantri Pension Yojana | Atal Pension Yojana Maturity Amount | Atal Pension Yojana Online Apply | Atal Pension Yojana Calculator | Pradhan Mantri Pension Yojana Online Apply | Atal Pension Yojana Eligibility | Atal Pension Yojana Benefits | Atal Pension Yojana Age Limit | Who are Not Eligible for Atal Pension Yojana | Atal Pension Yojana Maturity Amount | Atal Pension Yojana tax Benefits | Atal Pension Yojana vs NPS | Atal Pension Yojana Details


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்