பணிக்காலத்தில் ஓய்வில்லாமல் சம்பாதித்து ஊதியத் தொகை பெறுவதுடன், அதனை முதலீடு செய்யாமல் ஓய்வு காலத்திலும் கஷ்டப்படுவர். இவ்வாறு, ஓய்வுக் காலத்தில் நிம்மதியாக இருப்பதற்கு அரசு பல்வேறு சலுகைகளை செய்து வருகிறது. அந்த வகையில், பெரும்பாலானோர் வரவேற்பது முதலீடு செய்யும் திட்டமாகும். இதில், அவர்கள் ஓய்வுக் காலத்தில் பென்சன் தொகையைப் பெறலாம்.
பென்சன் திட்டம்
அமைப்பு சாரா துறையைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசு கடந்த 2019 ஆம் ஆண்டு பிரதமர் ஷ்ரம் யோகி மாந்தன் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ், ரூ.200 முதலீடு செய்வதன் மூலம், கணவன், மனைவி இருவருமே பென்சன் தொகையைப் பெறலாம்.
எப்படி முதலீடு செய்வது?
இந்த திட்டத்தின் கீழ், 200 ரூபாய் முதலீடு செய்வதன் படி, ரூ.72,000 பென்சன் தொகையாகப் பெற முடியும். அதன் படி, இதில் பயன்பெறுவதற்கு மாதந்தோறும் ரூ.200-ஐ முதலீடு செய்ய வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே அவர்களது ஓய்வுக் காலத்தில் இந்த தொகையினைப் பெற முடியும்.
இந்தத் திட்டம், மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு அமைப்பு சாரா தொழிலாளர்கள் பயன்பெறுபவையாக அமையும்.
முதலீடு மற்றும் பென்சன் தொகை
அதன் படி, 18 முதல் 40 வயது வரையுடைய நபர்கள், மாதந்தோறும் ரூ.15,000 வருமானம் ஈட்டுவதற்கு அமைப்பு சாரா தொழிலாளர்கள், பிரமரின் ஷ்ரம் யோகி மாந்தன் யோஜனா திட்டத்தின் கீழ் இணைந்து முதலீடு செய்யலாம்.
அதன் பிறகு, முதலீடு செய்த பயனாளி 60 வயதைத் தொட்ட பிறகு மாதம் 3000 வீதம், ஆண்டுக்கு ரூ.72,000-ஐ பென்சன் தொகையாகப் பெற முடியும்.
பென்சன் பெறும் நபர் இல்லாவிட்டால்
பிரதமரின் இந்த திட்டத்தின் கீழ் முதலீடு செய்த பிறகு, பென்சன் பெறும் காலத்தில் பயனாளி இறந்து விட்டால் அவரது கணவர் அல்லது மனைவிக்கு 50% பென்சன் தொகை கிடைக்கப்பெறும். மேலும், இந்தத் திட்டத்தில் இணைந்து முதலீடு செய்ய விரும்பும் நபர்கள் பொது சேவை மையத்துக்குச் சென்று கணக்கு தொடங்கி முதலீடு செய்யலாம்.
இத்திட்டத்தின் மூலம், ஓய்வுக் காலத்தில் எந்த வித பயமுமின்றி, நம்மால் வாழ முடியும். மாதந்தோறும் கிடைக்கும் இந்தப் பென்சன் தொகையை வைத்து, யாரையும் எதிர்பார்க்காமல் வாழலாம்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....
Govt Pension Scheme for Above 45 Years | Old Age Pension Scheme | Old Age Pension Scheme in India | Govt Pension Scheme for Above 50 Years | Govt Pension Scheme for Above 40 Years | Pension Scheme in India by Government |Old Age Pension Scheme in Tamilnadu Eligibility | Old Pension Scheme in Tamilnadu | Old Pension Scheme in Tamilnadu in Tamil | State government Pension Details | Old Pension Scheme in Tamilnadu Latest News | tn Old Age Pension apply online | Old Age Pension Tamilnadu status | Old Pension Scheme for government employees in Tamilnadu in Tamil
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…