Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Govt okays residual stake sale of HZL: தொடர்ந்து ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகளை வாங்கும் Vedanta நிறுவனம்…..

Gowthami Subramani May 26, 2022 & 09:40 [IST]
Govt okays residual stake sale of HZL: தொடர்ந்து ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகளை வாங்கும் Vedanta நிறுவனம்….. Representative Image.

Govt okays residual stake sale of HZL: ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்தின் மீதியிருக்கும் பங்குகளை விற்க உள்ளதாக மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. மே மாதம் 25 ஆம் நாள் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான கூட்டத்தில்  இந்த முடிவுக்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் சந்தைக்கு வரும் HZL

இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, ஹிந்துஸ்தான் நிறுவனத்தின் (HZL)-ன் 29.5% பங்குகளை தொடர்ந்து வைத்திருக்கிறது. சமீபத்தில், மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமாக விளங்கிய எல்ஐசி பங்குகள் விற்பனை ஆனது. அதனைத் தொடர்ந்து தற்போது, ஹிந்துஸ்தான் வைத்திருக்கும் 29.5% பங்குகளைத் தொடர்ந்து வைத்திருக்கிறது (Hindustan Zinc Dividend).

உற்பத்தியில் முன்னிலை

உலகின் மிகப்பெரிய துத்தநாகம், ஈயம் மற்றும் வெள்ளி உற்பத்தியாளர்களில் ஒன்றானது தான் ஹிந்துஸ்தான் துத்தநாக நிறுவனம். இதன் பங்குகளை விற்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருந்த நிலையில், 2016 ஆம் ஆண்டில் இந்நிறுவனத்தின் ஊழியர் சங்கம் இந்தத் திட்டத்தை தடுத்து நிறுத்தியது. இதன் அடிப்படையில் தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் அதன் பங்குகளை சந்தையில் விற்க அனுமதி அளித்தது.

வேதாந்தா என்ட்ரி

வேதாந்தா குழுமம் கடந்த 2002-03 ஆம் ஆண்டில், ஹிந்துஸ்தான் துத்தநாகம் நிறுவனத்தின் 26% பங்குகளை ரூ. 445 கோடிக்கு வாங்கியது (Hindustan Zink Share Price). மேலும், சில அரசாங்க விதிமுறைகளின் படி, கூடுதலாக 18.92% பங்குகளையும் வாங்கியது. பொதுமக்களிடமிருந்து HZL நிறுவனத்தின் பங்குகளில் 20% அதிகமாகப் பெற்றுள்ளது. தற்போது, வேதாந்தா நிறுவனம் 64% அதிகமான பங்குகளைப் பெற்று, மீதமிருக்கும் பங்குகளை வாங்குவதற்கான திறனில் 5%-ஐயும் பெற்றுள்ளது.

இலக்கை அடைய

பங்குச்சந்தையில், பட்டியலிடப்பட்ட நிறுவனங்களுக்கான மார்க்கெட் விதிமுறைகளின் படி, அரசு நிறுவனத்தின் 25% பொது பங்குகளைப் பராமரிப்பது அவசியம் (Vedanta Stake in Hindustan Zinc).

ஆனால், வரும் 2023 ஆம் நிதியாண்டிற்குள், விலக்கு இலக்கு ரூ.65,000 கோடியை அடைய வேண்டும். அதே சமயம், மே மாதம் 25 ஆம் நாளின் படி, HZL பங்குகள் 3.14% உயர்ந்துள்ளது. மேலும் ரூபாய் மதிப்பில் ரூ.305.5 ஆக இருந்தது. அதாவது ஹிந்துஸ்தான் துத்தநாகம் நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பான ரூ.1.28 டிரில்லியனில் உள்ளது. இந்த சூழ்நிலையில், இதன் முழுப் பங்குகளையும் விற்பதன் மூலம் அரசாங்கத்திற்கு ரூ. 37,700 கோடி வருமானத்தைப் பெற முடியும். இதன் மூலம் அதன் இலக்கை அடைய முடியும் என கூறப்படுகிறது (Hindustan Zinc Vedanta in Tamil).

இதே போல, அமைச்சரவையில் பாரத் தங்கச் சுரங்கத்தப் பற்றிய பேச்சுவார்த்தைகளும் அடங்கின. அதன் படி, பாரத் தங்கச் சுரங்கத்தின் நிலம் மற்றும் பிற சொத்துக்களை தேசிய நிலப் பணமாக்கல் நிறுவனத்திற்கு மாற்றுவதாக முடிவு செய்துள்ளது. இதில், பணமாகப் பெறக் கூடிய நிலத்தின் ஒரு பகுதி, தொழில்துறை வளர்ச்சிக்காக உதவும் எனக் கூறப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்