Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to Apply for LIC IPO: நீங்க LIC-யின் பங்கு வாங்கணுமா? அதுக்கு LIC IPO ஆன்லைன்ல இப்படி apply பண்ணுங்க!

Priyanka Hochumin June 01, 2022 & 08:20 [IST]
How to Apply for LIC IPO: நீங்க LIC-யின் பங்கு வாங்கணுமா? அதுக்கு LIC IPO ஆன்லைன்ல இப்படி apply பண்ணுங்க!Representative Image.

How to Apply for LIC IPO: பங்குச் சந்தையில் மிகவும் ஆர்வமாக இருப்பவர்களுக்கு சமீபத்தில் கிடைத்த நற்செய்தி, இந்தியாவில் மிகவும் முதன்மையான பாலிசி நிறுவனம் LIC அதன் பங்குகளை விற்கப்போகிறது என்பது தான்.

சமீபத்தில் இந்திய மக்கள் அனைவராலும் பேசப்பட்ட ஒரு செய்தி, என்னது LIC அதோட பங்க விற்கப்போகிறதா? என்ற குழப்பத்திலும் சந்தோஷத்திலும் இருந்தனர். இதில் நாம் ஒரு ஷேர் பங்கு வாங்கினால் போதும் நிரந்தர தீர்வு காணும் வகையில் லாபம் வரும் என்று பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் கிட்டத்தட்ட 30 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை வைத்திருக்கும் LIC தனது 5 சதவீத பங்குகளை விற்கப்போவதாக தகவல் வெளியாகின. ஆனால் வெறும் 3.5% பங்குகளை தான் LIC நிறுவனம் விற்பனை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் LIC இன் பங்குகள் மே 4 முதல் மே 9 ஆம் தேதி வரை வெளியிடப்பட்டுள்ளது.

எவ்ளோவுக்கு விற்பனை?

இப்படியாக LIC இன் ஒவ்வொரு பங்குகளும் ரூ. 902 முதல் ரூ. 949 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் LIC பங்குகளுக்கு சுமார் 21 ஆயிரம் கோடி ரூபாய் வரை திரட்டப்படும் என்று கூறப்படுகிறது. இந்த தொகை இந்திய வர்த்தகத்தில் இதுவரை இல்லாத மிகப்பெரிய தொகையாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த பங்குகளை வாங்குவதன் மூலம் நமக்கு ஏதேனும் பயன் உள்ளதா? என்று கேட்டால், LIC இன் பங்குகள் குறுகிய கால வர்த்தகத்துக்கு ஏற்றது இல்லை. ஆனால் நீண்டகால வர்த்தகத்திற்கு ஏற்ற பங்காக திகழ்கிறது, எனவே பங்குதாரர்கள் மிகவும் ஆர்வமாக முதலீடு செய்கின்றனர். இப்படிப்பட்ட முக்கிய பங்குகளை நீங்கள் வாங்க வேண்டுமா? அதற்கு நீங்கள் இதை செய்யுங்கள்.

LIC பங்குகளை பாக்கணுமா..? அப்ப இந்த மாதிரி பண்ணுங்க…..

தேவைப்படும் ஆவணங்கள்

  • வாங்கி கணக்கு விவரங்கள்
  • அடையாளச் சான்று
  • உங்கள் வயதிற்கான சான்று

இந்த மூன்று ஆவணங்களும் மிக முக்கியமாக தேவைப்படுகிறது. மேலும் நீங்கள் இதற்கு விண்ணப்பிப்பதற்கு முன்பு டீமேட் அக்கௌன்ட் ஒன்றை ஓபன் சித்திருக்க வேண்டும். அது எப்படி ஓபன் செய்வது என்றால், UPI சப்போர்ட் செய்யும் பிளாட்ஃபார்ம் அல்லது டீமேட் அக்கௌன்ட் கிடைக்கும் ஆப்-களின் உதவியுடன் டீமேட் அக்கௌன்டை ஓபன் செய்யலாம்.

செயல்முறை

உங்களிடம் நெட் பேங்கிங் அக்கௌன்ட் இருந்தால் அதனை லாகின் செய்துகொள்ளவும். பிறகு அதில்  IPO/e-IPO investment என்ற ஆப்ஷனை கிளிக் செய்து ஓபன் செய்யவும்.

இப்பொழுது ஒரு ஷ்கிறீன் வரும், அதில் உங்களின் பேங்க் விவரங்கள் கேட்கப்படும். அதனை தெளிவாக மற்றும் கவனமாக நிரப்ப வேண்டும்.  

அதனைத் தொடர்ந்து Invest in IPO என்பதை தேர்வு செய்து, அதில் LIC பங்குகளை கிளிக் செய்து உங்களுக்கு எவ்ளோ பங்குகள் வேண்டுமோ அதனை செலக்ட் செய்யவும். அத்துடன் அதற்கான ஏல பணத்தை நிர்ணயிக்கவும். இவர் முடிந்த உடன் Apply Now என்பதை கிளிக் செய்து உங்களுடைய ஆர்டரை பதிவு செய்யயும். வெற்றிகரமாக நீங்கள் LIC பங்குகளை பதிவு செய்துள்ளீர்கள்.

HDFC-ன் புதிய திட்டம்…! இனி டிஜிட்டல் முறையில் மட்டுமே….! முழு விவரம் இங்கே…

முக்கிய குறிப்பு

 நீங்கள் LIC பங்குகளை வாங்குவதற்கான தொகையை நிர்ணயித்த பிறகு, அந்த தொகை உங்களின் வங்கியால் பிளாக் செய்யப்படும். பின்பு ஏலம் முடிந்த பிறகு உங்களின் அக்கௌன்ட்டில் இருந்து அந்த தொகை எடுக்கப்படும்.

குறிப்பாக நீங்கள் எல்.ஐ.சி பாலிசிதாரராக இருந்தால், உங்களின் பாலிசி மற்றும் டீமேட் அக்கௌன்ட் இரண்டையும் உங்களின் பான் என்னுடன் இணைக்க வேண்டும்.

ஒரு வேளை நீங்கள் LIC ஊழியராக இருந்தால் ரூ. 45/- மற்றும் பாலிசிதாரராக இருந்தால் ரூ. 60/-ம் LIC பங்கு விலையில் இருந்து தள்ளுபடி அளிக்கப்படும்.

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்