Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தமிழக அரசின் மகத்தான திட்டம்… தந்தை இல்லாத பெண்களுக்கான திருமண உதவித்தொகை..? எப்படி பெறுவது…?

Gowthami Subramani August 22, 2022 & 18:00 [IST]
தமிழக அரசின் மகத்தான திட்டம்… தந்தை இல்லாத பெண்களுக்கான திருமண உதவித்தொகை..? எப்படி பெறுவது…?Representative Image.

பெண்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் மாநில அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஒரு முக்கியமான திட்டமாக விளங்குவது அன்னை தெரசா நினைவு திருமண உதவித் திட்டம் ஆகும்.

திட்டத்தின் நோக்கம்

இந்தத் திட்டத்தின் கீழ், பெற்றோர்களால் கைவிடப்பட்ட அல்லது பெற்றோர்களை இழந்த பொருளாதாரத்தில் நலிவடைந்த ஏழைப் பெண்களுக்கு வழங்கப்படுகிறது. அதன் படி, பொருளாதார ரீதியாக மிகவும் பின் தங்கியுள்ள ஏழைப்பெண்களுக்கு உதவுவதற்காக தமிழக அரசு இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது.

திட்டத்தின் பயன்கள்

இந்த திட்டத்தின் கீழ், ஆதரவற்ற பெண்களின் திருமணத்திற்காக, நிதி உதவி வழங்கப்படுகிறது. அதன் படி, ரூ. 25,000 மற்றும் ரூ.50,000 என பிரிவுகளுக்கு வழங்கப்படுகிறது.

மேலும், இத்திட்டத்தில் தாலிக்கு தங்கம் என்பதன் படி, தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் ஆதரவற்ற பெண்கள் பெரும் பயனை அடைவர் எனக் கூறப்படுகிறது.

தகுதிக்கேற்ப பெண்கள் பெறும் ஊதியத் தொகை

இந்த திட்டத்தில் குறிப்பிட்டுள்ள படி, 10 ஆம் வகுப்பு படித்த அல்லது படிப்பறிவில்லாத பெண்களுக்கு திருமண உதவித் தொகையாக ரூ.25,000-ம், 8 கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது.

மேலும், 12 ஆம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ படித்த பெண்களுக்கு ரூ.50,000 உதவித் தொகை மற்றும் 8 கிராம் தங்கம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திட்டத்தில் பயன்பெறுவதற்கான தகுதிகள்

தமிழக அரசு அறிவித்துள்ள இந்த மகத்தான திட்டத்தில், பெண்கள் 18 வயதைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

அதே போல, மணமகனும் 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.

மேலும், இந்தத் திட்டத்தின் அறிவுரைகளின் படி, திருமணத்துக்கு 40 நாள்களுக்கு முன்பே இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் விண்ணப்பித்திருக்க வேண்டும்.

சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்

இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழ்க்காணும் ஆவணங்களைப் பெற்றிருப்பது அவசியம் ஆகும்.

மாற்றுச் சான்றிதழ் (Transfer Certificate)

திருமண அழைப்பிதழ் நகல் (Marriage Invitation Xerox)

விண்ணப்பதாரரின் புகைப்படம் (Passport Size Photo)

ஆதார் அட்டை (Aadhaar Card)

வருமான சான்றிதழ் (Income Certificate)

ஆதரவற்றோர் என்பதற்கான சான்று அல்லது பெற்றோர்களின் இறப்புச் சான்றிதழ்

இந்த ஆவணங்களை வைத்து இந்த திட்டத்தில் பயன்பெற நினைப்பவர்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

How to Apply for Marriage Scheme in Tamil nadu | How to Apply for Marriage Scheme in Tamil nadu 2022 | How to Apply for Marriage Scheme in Tamilnadu | How to Apply for Inter Caste Marriage Incentive Scheme in Tamilnadu | How to Apply Marriage Scheme in online | How to Apply for Marriage assistance Scheme in Tamilnadu | How to Apply for Marriage Grant | How to Apply for Marriage Scheme | Tamil nadu Government Marriage Scheme Apply online | Tamil nadu Government Marriage Scheme Application form pdf in Tamil | Tamil nadu Government Marriage Scheme in Tamil | Tamil nadu Government Marriage Scheme online | Moovalur Ramamirtham Marriage Scheme Application form in Tamil | Marriage Amount Application form | Marriage assistance Scheme Application form Download | Marriage Scheme in Tamilnadu 2022 in Tamil | How to Apply for Marriage Certificate


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்