Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

எளிமையான முறையில் ஆதார் கார்டில் திருத்தம் செய்யணுமா..? இதோ உங்களுக்கான புதிய வசதி அறிமுகம்..!

Gowthami Subramani September 15, 2022 & 17:40 [IST]
எளிமையான முறையில் ஆதார் கார்டில் திருத்தம் செய்யணுமா..? இதோ உங்களுக்கான புதிய வசதி அறிமுகம்..!Representative Image.

ஆதார் அட்டைகளில், பெயர், பிறந்த தேதி, முகவரி உள்ளிட்டவற்றை திருத்தம் செய்வதற்கு வங்கிகளுக்கோ, தலைமை தபால் நிலையங்களுக்கோ செல்ல வேண்டிய அவசியமில்லை.

ஆதார் அட்டையின் முக்கியத்துவம்

ஒவ்வொரு குடிமகனுக்கும், ஆதார் அட்டை என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நமது நாட்டை டிஜிட்டல் இந்தியாவுக்கு மாற்றுவதற்கு இது முதற்படி என்றும் கூறலாம். அந்த வகையில், ஆதார் கார்டில் திருத்தம் செய்ய வேண்டி, நிறைய பேர் வங்கிகளுக்கோ, தலைமை தபால் நிலையங்களுக்கோ அலைகின்றனர்.

வாக்காளர் அட்டையைப் போன்றே

இந்தியக் குடிமகன்கள் அனைவருக்கும் எவ்வாறு வாக்காளர் அட்டை முக்கியமாக இருக்கிறதோ, அது போல ஆதார் அட்டை வைத்திருப்பது அவசியம் ஆகும். வாக்காளர் அட்டையை 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே பெற முடியும். ஆனால், ஆதார் அட்டை பிறந்த குழந்தைகளுக்கும் இருக்க வேண்டும் எனக் கூறப்பட்டு வருகிறது. இந்த ஆதார் அட்டை, பல்வேறு தரப்பட்ட பயன்பாடுகளுக்கு உதவுகிறது. இந்த அட்டையில் சிறிய தவறு நேர்ந்தால், அது பெரிய விளைவை ஏற்படுத்தும். எனவே, ஆதார் அட்டையைத் திருத்தம் செய்வது அவசியம் ஆகும்.

எளிமையான முறை

ஆதார் கார்டில் உள்ள விவரங்களைத் திருத்தம் பல்வேறு தரப்பட்ட வழிமுறைகளை வகுத்துள்ளது. அதன் படி, நமது ஆதார் அட்டைகளில் பெயர், பிறந்த தேதி, முகவரி உள்ளிட்டவற்றை திருத்தம் செய்ய வேண்டுமானால், நாம் பெரும்பாலும் அலைய வேண்டி இருக்கும்.

ஆனால், தற்போது எளிமையான முறையில் ஆதார் விவரங்களைத் திருத்தம் அருமையான வழி ஒன்றை உருவாக்கியுள்ளது. அதன் படி, ஊரிலேயே இருக்கும் தபால் நிலையத்தின் கிளைகளுக்குச் சென்று விவரங்களை மாற்றிக் கொள்ள முடியும்.

தபால் சேவையைப் பயன்படுத்தி

அஞ்சல் அலுவலர்களை டிஜிட்டல் மயமாக்கி பல்வேறு சேவைகளை வழங்குவதற்காக தபால் துறை வழி செய்துள்ளது. அதன் படி, கிராம மக்கள், ஆர்டி டெபாசிட், சுகன்யா சம்ரிதி யோஜனா டெபாசிட் போன்ற பல்வேறு சேமிப்புத் திட்டங்களில் பணத்தை டெபாசிட் செய்து கொள்ள உதவுகிறது. மேலும், ஜிடிஎஸ் மூலம் ஆதார் அட்டையை பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

அதன் படி, இந்த திட்டத்தின் முதல் கட்டமாக, 130 தபால் நிலையங்களில் இந்த வசதி கிடைக்கும். அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டத்தில் மீதமுள்ள தபால் நிலையங்களில் இந்த வசதி கிடைக்கும். அதன் படி, இங்கு ஆதார் அட்டையில் திருத்தம் செய்து கொள்ளவும் முடியும், புதிய ஆதார் கார்டையும் பெற்றுக் கொள்வதற்கான வசதிகளைச் செய்துள்ளன.

இது பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பான வசதியாகக் கருதப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்