Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

CAN Number in eSevai: இ-சேவை மையத்தில் குடிமக்கள் கணக்கு பெறுவது எப்படி? முழு விவரங்களும் இங்கே…

Gowthami Subramani [IST]
CAN Number in eSevai: இ-சேவை மையத்தில் குடிமக்கள் கணக்கு பெறுவது எப்படி? முழு விவரங்களும் இங்கே…Representative Image.

CAN Number in eSevai: குடிமக்கள் கணக்கு எண் என்றால் என்ன?

தமிழகத்தில் உள்ள குடிமக்கள், தங்களுக்குத் தேவையான, நடைமுறையில் பயன்படுத்தப்படுகின்ற சான்றிதழ்களைப் பெறுவதற்கு அரசு சம்பந்தப்பட்ட சேவைகளை அணுகி இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். அந்த வகையில், தமிழக மக்களுக்காக தமிழக அரசால் தொடங்கப்பட்ட இணையதள வசதியே தமிழ்நாடு இ-சேவை என்பதாகும்.

இதில் தமிழக மக்கள் அவர்களுக்குத் தேவையான சான்றிதழ்களை விண்ணப்பிக்கலாம். இவ்வாறு விண்ணப்பிப்பதற்கு, குடிமக்கள் கணக்கு எண் (Citizen Access Number) தேவைப்படுகிறது.

TNeGA – தமிழ்நாடு இசேவை மையம்

CAN Number Register

பயனர்கள் முதலில் இ-சேவை மையத்தின் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும். அதில், CITIZEN Login என்பதைக் க்ளிக் செய்து, பின் அந்த பக்கத்தில் SIGN UP என்பதைக் க்ளிக் செய்ய வேண்டும்.

அதன் பின்னர், அதில் உங்கள் பெயர், இ-மெயில், தொலைபேசி எண், User ID, Password உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்து பின்னர், Submit என்பதைக் க்ளிக் செய்ய வேண்டும்.

Submit கொடுத்த பின், அடுத்து ஒரு பக்கம் தோன்றும். அந்த பக்கத்தில் OTP-ஐ Enter செய்ய வேண்டும்.

இவ்வாறு, செய்த பின் பயனர்களின் தமிழ்நாடு இ-சேவை கணக்கு வெற்றிகரமாக பதிவு செய்யப்படும்.

எந்த ஒரு சான்றிதழையும் பதிவு செய்வதற்கு தமிழ்நாடு இ-சேவை கணக்கில் பதிவு செய்திருப்பது அவசியம் ஆகும்.

பிறகு, முதன்மை பக்கத்திற்கு மீண்டும் சென்று அதில் நமக்குக் கிடைத்த User ID, Password மற்றும் Captcha எண்ணைப் பதிவிட்டு Login செய்ய வேண்டும்.

பதிவு செய்த பின், இ-சேவை இணையதளத்தின் மூலம் எந்தெந்த சேவைகள் வழங்கப்படுகின்றன என்ற விவரங்களைப் பார்க்கலாம். அதன் படி, அந்தப் பக்கத்தில் பல்வேறு துறைகளின் பெயர்கள், இருக்கும்.

அதில் குறிப்பிட்டுள்ள துறைகளின் கீழ், பல்வேறு சேவைகள் வழங்கப்பட உள்ளன. அதன் படி, Revenue Department என்பதைக் க்ளிக் செய்ய வேண்டும்.

இதில் நீங்கள் உங்களுக்குத் தேவையான சான்றிதழை விண்ணப்பித்துப் பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறு, சான்றிதழைக் க்ளிக் செய்யும் போது, அந்த பக்கத்தில் Proceed என்பதைக் க்ளிக் செய்ய வேண்டும்.

பின்னர், அதற்கு அடுத்து வரும் பக்கத்தில் Register CAN என்பதைக் க்ளிக் செய்ய வேண்டும். இதில் கேட்கப்படும் விவரங்களைப் பதிவிட வேண்டும். விவரங்கள் கொடுக்கும் போது உங்கள் மொபைல் எண்ணைச் சரியாக பதிவிட வேண்டும்.

 

இவ்வாறு விவரங்கள் அனைத்தையும் பதிவிட்ட பிறகு, Register என்பதைக் க்ளிக் செய்தால், நீங்கள் பதிவு செய்த எண்ணிற்கு OTP வரும். அதை உறுதிபடுத்திய பிறகு, உங்களுக்கான CAN Number அதாவது குடிமக்கள் கணக்கு எண் வந்து விடும். இந்த கணக்கு எண்ணை மறக்காமல் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

 

CAN எண்ணை மறந்து விட்டால்

இதுவே, பயனர் CAN எண்ணை மறந்து விட்டால், கீழே கொடுக்கப்பட்டுள்ள பக்கத்திற்குச் சென்று, பயனரின் தொலைபேசி எண்ணை உள்ளிட்டு search என்பதைக் க்ளிக் செய்ய வேண்டும். அதன் பின்னர், மொபைல் எண்ணின் வாயிலாகவே பதிவு செய்த CAN எண் மற்றும் பெயர் கிடைக்கும்.

 

https://dosomethingnew.in/wp-content/uploads/2018/06/Tnega-can-number-registration-do-something-new-11-e1529246783214.png

இந்த முறைகளின் மூலம், இ-சேவையின் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்தில் CAN எண்ணைப் பதிவு செய்து சான்றிதழ்களைப் பெறலாம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

CAN Number in eSevai | How to Get CAN Number in eSevai | Forgot CAN Number eSevai | How to Find CAN Number | How to Check CAN Number status | How to Get CAN Number online | CAN Number in community certificate | CAN Number Registration | CAN Number Already Registered | How to Change Mobile Number in CAN Number | How to Find CAN Number in eSevai | What is CAN Number in eSevai | How to Get eSevai ID | How to Get Transaction ID from Reference Number in sbi | How to Create Login ID in eSevai | How to Find CAN Number in tnega


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்