Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கிரிப்டோ கரன்சி வைத்துள்ளவர்கள் பட்டியல்.. உலகளவில் இந்தியாவுக்கு 7வது இடம்!!

Sekar August 12, 2022 & 08:26 [IST]
கிரிப்டோ கரன்சி வைத்துள்ளவர்கள் பட்டியல்.. உலகளவில் இந்தியாவுக்கு 7வது இடம்!!Representative Image.

இந்தியர்களில் 7.3 சதவீத மக்கள் கிரிப்டோ கரன்சி எனப்படும் மெய்நிகர் நாணயங்களை வைத்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் இயங்கும் அமைப்பு ஒன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக உலக அளவில் கிரிப்டோ கரன்சிகள் செயல்பட்டு வந்தாலும், இந்தியாவில் 4ஜி சேவை மற்றும் இணையப் பயன்பாட்டின் அதிகரிப்பால் 2015'க்கு பிறகே மெல்லமெல்ல வேகம் பிடித்தது.

மேலும் இந்தியாவில் கருப்பு பணத்தை கட்டுப்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு, கிரிப்டோ கரன்சிகளில் முதன்மையானதாக கருதப்படும் பிட்காயினின் மதிப்பு மிக வேகமாக அதிகரித்தது.

பின்னர் இந்தியாவில் கிரிப்டோவுக்கு தடை என்று பேசப்படும்போதெல்லாம், கிரிப்டோ கரன்சிகளின் மதிப்புகள் வீழ்வதும் பின்னர் எழுவதும் வாடிக்கையான ஒன்றாக இருந்து வந்தாலும், இந்தியாவில் தற்போது வரை கிரிப்டோ கரன்சிக்கு சட்டப்பூர்வ அங்கீகாரத்தை மத்திய அரசு வழங்கவில்லை. அதே நேரத்தில் தடை செய்யப்படவும் இல்லை.

இதனால் இந்தியர்கள் கிரிப்டோ கரன்சிகளில் முதலீடு செய்வது தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் அதிக கிரிப்டோ கரன்சிகள் வைத்துள்ளவர்கள் பட்டியலில், இந்தியா உலக அளவில் 7வது இடம் வகிப்பது தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக ஐ.நா.வின் வர்த்தகம் மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், "கடந்த 2021 ஆம் ஆண்டில் கிரிப்டோ கரன்சி வைத்துள்ள நாடுகளின் பட்டியலில், 15 நாடுகள் முன்னிலையில் உள்ளன. ஐரோப்பிய நாடான உக்ரைன் இந்தியா பாட்டிலில் முதலிடம் வகிக்கிறது. 

உக்ரைனில் வசிக்கும் மக்களில் 12.7 சதவீதம் பேர் கிரிப்டோகரன்சி வைத்துள்ளனர். ரஷ்யாவில் 11.9 சதவீத மக்களும், வெனிசுலாவில் 10.3 சதவீத மக்களும், சிங்கப்பூரில் 9.4 சதவீத மக்களும் கிரிப்டோகரன்சி வைத்து, இந்த பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். அமெரிக்காவில், 8.3 சதவீத மக்கள் டிஜிட்டல் கரன்சிகளை வைத்துள்ளனர். 

இந்தியாவில் 7.3 சதவீத மக்கள் கிரிப்டோ கரன்சி வைத்துள்ளனர். இதன் மூலம் பட்டியலில் இந்தியா 7 ஆவது இடத்தில் உள்ளது. கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த காலத்தில், கிரிப்டோகரன்சியின் பயன்பாடு உலக அளவில் மிகவும் அதிகரித்துள்ளது." எனத் தெரிவித்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்