Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ரேஷன் கடை இப்போ திறந்திருக்கா? ஈஸியா ஆன்லைன்ல இப்படி செக் பண்ணுங்க…

Gowthami Subramani July 25, 2022 & 14:05 [IST]
ரேஷன் கடை இப்போ திறந்திருக்கா? ஈஸியா ஆன்லைன்ல இப்படி செக் பண்ணுங்க…Representative Image.

How to Know Ration Shop Open or Not in Online: டிஜிட்டல் உலகமாக மாறும் இந்த காலத்தில் எல்லாமே ஆன்லைனில் இயங்கிக் கொண்டிருக்கிறது. கடைக்குப் போய் பொருள்கள் வாங்குவது முதல் தியேட்டருக்குச் சென்று மூவி பார்ப்பது வரை எல்லாமே ஆன்லைனில் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது.

நேரம் இல்லாமல்

இந்த காலகட்டத்தில், கணவன், மனைவி இருவருமே வேலைக்குச் சென்றாக வேண்டும் என்ற சூழ்நிலையில், அன்றாட வாழ்க்கையில் நாம் செய்ய வேண்டிய ஒரு சிலவற்றை செய்வதற்கு நமக்கு நேரம் இல்லாமல் இருக்கிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையை மாற்றுவதற்கு பல்வேறு தொழில்நுட்பங்கள் நடைமுறைத்தப்பட்டு வருகின்றன.

ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

அந்த வகையில் சொல்லும் போது, ரேஷன் கடைக்குச் சென்று பொருள்களை வாங்குவதற்கு நேரமில்லாமல் கூட சிலர் இருக்கின்றனர். இதில் ஒரு சிலர், நேரம் இல்லாமலோ, அவர்கள் போகும் நேரத்தில் ரேஷன் கடை இல்லாமலோ போய் விடும். இதில், தற்போது வெளிவந்த அறிக்கையின் படி ரேஷன் கடைக்குச் சென்று பொருள்கள் வாங்குவதற்கு முன், நாம் வீட்டிலேயே இருந்து ஆன்லைனில் ரேஷன் கடை இருக்கிறதா என பார்த்துக் கொள்ளலாம். ஆன்லைனில், ரேஷன் கடை திறந்துள்ளதா என மக்கள் அவரவர் இருப்பிடத்திலிருந்தே சரிபார்த்துக் கொள்ள முடியும்.

நம் ஊரில் ரேஷன் கடை இன்று திறந்துள்ளதா என்பதைக் கீழ்க்காணும் வழிமுறைகளின் மூலம் சரிபார்த்துக் கொள்ளலாம்.

முதலில் தமிழ்நாடு உணவுப் பொருள்கள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

அதிகாரப்பூர்வ இணையதளம்: https://www.tnpds.gov.in/

பின், அதன் முகப்புப் பக்கத்தில் உள்ள பொது விநியோகத் திட்ட அறிக்கைகள் என்பதைக் க்ளிக் செய்ய வேண்டும்.

பிறகு, அந்தப் பக்கத்தில் உங்கள் மாவட்டம், வட்டம் போன்றவற்றைத் தேர்ந்தெடுக்கவும். பிறகு உங்களுக்காக ஒதுக்கப்பட்ட ரேஷன் கடை குறியீட்டு எண்ணைத் தேர்ந்தெடுக்கவும். அந்த பக்கத்தில், ரேஷன் கடை தொடர்பான கடை பொறுப்பாளர்கள், கடையின் பெயர், தொடர்பு எண், போன்ற முக்கிய விவரங்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.

Table

Description automatically generated with low confidence

இது போன்ற விவரங்களைச் சரியாக அடையாளம் கண்டு கடை குறியீட்டைக் க்ளிக் செய்யும் போது கீழ்க்கண்ட பக்கம் திறக்கும்.

இந்தப் பக்கத்தில் வேலை நேரம், கடை முகவரி உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் கொண்டிருக்கும். இதன் மூலம், எளிமையான முறையில் ரேஷன் கடை இயக்கத்தில் உள்ளதா என்பதைக் கண்டறியலாம்.

Graphical user interface, text, application, email

Description automatically generated

மேலும், நுகர்வோர் பிரிவின் இந்த இணையதளத்திற்குச் சென்று புது ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது, புதிதாக பயனரை சேர்ப்பது உள்ளிட்ட விவரங்களையும் இதில் காணலாம். இது மட்டுமல்லாமல், பொருள்கள் இருப்பு நிலை, புகார்கள் நிலை போன்ற ஆப்ஷன்களும் உள்ளன. இதன் மூலம், ரேஷனில் உள்ள பொருள்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம். மேலும், பொதுமக்கள் புகார் தெரிவிக்கும் வாயிலாக புகார் செய்த விவரங்கள் பற்றியும், அந்த புகார்கள் தீர்க்கப்பட்டு விட்டதா என்பதையும் இதன் வாயிலாகத் தெரிந்து கொள்ள முடியும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

How to Find Ration Shop Address With Number | Ration Shop Address by Number Tamilnadu | How to Find Ration Shop Number in Tamilnadu | Tamilnadu Ration Shop Timings Today | TNPDS | How to Find Ration Shop Number in Smart Card | How to Check Ration Shop Open or Not | Ration Shop Working Days in Tamil nadu | Ration Shop Stock Details Tamilnadu | How to Find My Ration Number | How to Find Ration Shop Address with Shop Number


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்