Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

IAMPL in Tamilnadu: ரோல்ஸ் ராய்ஸ் மற்றும் ஹெச்ஏஎல் நிறுவனத்தின் புதிய ஒப்பந்தம்…! ஒசூரில் விரைவில் வரவிருக்கும் புதிய ஆலை…! எதற்காக தெரியுமா…?

Gowthami Subramani July 05, 2022 & 09:00 [IST]
IAMPL in Tamilnadu: ரோல்ஸ் ராய்ஸ் மற்றும் ஹெச்ஏஎல் நிறுவனத்தின் புதிய ஒப்பந்தம்…! ஒசூரில் விரைவில் வரவிருக்கும் புதிய ஆலை…! எதற்காக தெரியுமா…?Representative Image.

IAMPL Signs MOU TN Government: ஒசூரில் உள்ள வசதிகளை விரிவாக்கம் செய்வதற்காக, தமிழ்நாடு அரசுடன் சர்வதேச விண்வெளித் தயாரிப்பு நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

ரோல்ஸ் ராய்ஸ் மற்றும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் கூட்டு நிறுவனமாக விளங்குவது சர்வதேச விண்வெளி உற்பத்தி நிறுவனம் ஆகும். இது ஒசூரில் ஒரு புதிய உற்பத்தி ஆலையை அமைப்பதற்கான உத்தரவைப் பெற தமிழக அரசிடம் ஒப்பந்தம் கையெழுத்திட்டது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஜூலை மாதம் 4 ஆம் நாள், சிறு, குறு, மற்றும் நடுத்தர தொழில்கள் முதலீடுகளுக்கான ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. இதில், IAMPL நிறுவனம் தனது உற்பத்தி நடவடிக்கைகளை விரிவுபடுத்தும் நோக்கத்தில், தமிழ்நாட்டில் ஒரு புதிய ஆலை திறப்பதற்கான ஒப்பந்தத்தை தமிழக அரசுடன் வைத்துள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், தமிழ்நாடு முதலீடு மாநாடு 2022-ல் நிறைவேற்றப்பட்டது.

இது திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இது குறித்து, ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் இந்தியா மற்றும் தெற்காசியாவின் தலைவராக விளங்கும் ஜெயராமன் அவர்கள் கூறுகையில், எச்ஏஎல் உடன் கூட்டு முயற்சி செய்வதன் மூலம் உற்பத்தி, பொறியியல், தரம் உள்ளிட்டவற்றை வாடிக்கையாளர்களின் சேவைகளில் சிறந்த திறன்களை வெளிப்படுத்த முடியும் என்று கூறியுள்ளார். மேலும், இந்த பங்களிப்பில் துல்லியமான மற்றும் தரமான தயாரிப்புகளைத் தொடர்ந்து வழங்குவோம் என்று கூறினார்.

இந்தியாவின் விநியோகச் சங்கிலியை மேம்படுத்த இந்த விரிவாக்கத் திட்டத்திற்கு ஒப்புதல் பெற்றுள்ளனர்.

கடந்த 2010 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட IAMPL தனது தயாரிப்புப் பாகங்களை தயாரிப்பதற்காக ரோல்ஸ் ராய்ஸ் மற்றும் எச்ஏஎல் நிறுவனத்திற்கு இடையே 50/50 கூட்டு முயற்சியாக செயல்படுகிறது. தமிழ்நாடு அரசுடன் செய்த இந்த ஒப்பந்தத்தில் ஒரு சிறந்த செயல்பாட்டு முறையை நம்மால் பெற முடியும் எனக் கூறப்படுகிறது. சிவில் திட்டங்களுக்கு IAMPL வெவ்வேறு பாகங்களை வழங்குகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்