Fri ,Apr 26, 2024

சென்செக்ஸ் 74,158.16
-181.28sensex(-0.24%)
நிஃப்டி22,523.75
-46.60sensex(-0.21%)
USD
81.57
Exclusive

இந்தியாவின் 5ஜி சேவை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி.. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிரடி!!

Sekar October 14, 2022 & 10:50 [IST]
இந்தியாவின் 5ஜி சேவை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி.. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிரடி!!Representative Image.

அமெரிக்கா சென்றுள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பம் முற்றிலும் உள்நாட்டில் உருவாக்கப்பட்டு உள்ளது என்றும், இது வேறு எங்கிருந்தும் இறக்குமதி செய்யப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.

"5ஜி இன்னும் பொதுமக்களுக்கு சென்றடையவில்லை. எங்கள் நாட்டில் நாங்கள் அறிமுகப்படுத்திய 5G முற்றிலும் உள்நாட்டில் உள்ளது, தனித்தனியாக உள்ளது. கொரியா போன்ற நாடுகளில் இருந்து சில முக்கியமான பாகங்கள் வரலாம். ஆனால் நிச்சயமாக வேறு யாரிடமிருந்தும் வரவில்லை." என்று நிர்மலா சீதாராமன் வாஷிங்டனில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக நிகழ்வில் கலந்துகொண்டபோது கூறினார்.

இந்தியா இப்போது 5ஜி தொழில்நுட்பத்தை மற்ற நாடுகளுக்கு யாருக்கு வேண்டுமானாலும் வழங்க முடியும் என்றார். மேலும் நிர்மலா சீதாராமன் கூறுகையில், இந்தத் தயாரிப்பை உருவாக்கிய தனியார் நிறுவனங்கள், 2024-ஆம் ஆண்டுக்குள் நாட்டின் பெரும்பாலான மக்கள் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று கூறியுள்ளதாக தெரிவித்தார்.

முன்னதாக 2ஜி, 3ஜி மற்றும் 4ஜி தொழில்நுட்பங்களுக்காக இந்தியா மற்ற நாடுகளைச் சார்ந்திருந்த நிலையில், தற்போது மேற்குலக நாடுகளுக்கு இணையாக சொந்தமாக 5ஜி தொழில்நுட்பத்தை உருவாக்கி இந்தியா புதிய சரித்திரம் படைத்துள்ளது என 5ஜி சேவையை இந்தியாவில் அறிமுகம் செய்து வைத்தப்பது பிரதமர் மோடி கூறியது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்