Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

அடேங்கப்பா.. ரயில்வே ஊழியர்களுக்கு அறிவித்த போனஸ் எவ்வளவு தெரியுமா..? கேட்டா அசந்துடுவீங்க...

Gowthami Subramani October 12, 2022 & 16:40 [IST]
அடேங்கப்பா.. ரயில்வே ஊழியர்களுக்கு அறிவித்த போனஸ் எவ்வளவு தெரியுமா..? கேட்டா அசந்துடுவீங்க...Representative Image.

ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸாக 78 நாள் போனஸை அரசு அறிவித்துள்ளது. இதனால், ரயில் ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

இந்திய ரயில்வே தனது லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு 78 நாள்களுக்கு ஈடான ஊதியத் தொகையை வழங்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த 2021-22 நிதியாண்டில் ரயில்வே ஊழியர்களுக்கு வழங்கப்படும் போனஸ் என மோடி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும், உற்பத்தித் திறன் இணைக்கப்பட்ட போனஸாக, 11.27 லட்சம் Non-gazetted ரயில்வே ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு பணியாளருக்கும் அதிகபட்ச வரம்பாக 17,791 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ரயில்வே துறையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 92% வருவாய் அதிகரித்துள்ளதாக ஒன்றிய அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. அதன் படி கடந்த ஆண்டு ரயில்வே துறையின் மொத்த வருவாய் ரூ.17,394 கோடியாக இருந்தது. நடப்பு ஆண்டு அக்டோபர் மாதம் வரை மட்டுமே ரூ.33,476 கோடி வருவாய் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதில், முன்பதிவு மூலம் ரூ.26,961 கோடியும், முன்பதிவு அல்லாத பயணிகளின் மூலம் ரூ.6,515 கோடியும் வசூலிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்