Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நேற்று முகேஷ் அம்பானியின் மகள்…! இன்று ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ரீடெய்ல் நிறுவனங்களின் இயக்குனர்…! யார் இந்த இஷா அம்பானி…!

Gowthami Subramani July 01, 2022 & 14:15 [IST]
நேற்று முகேஷ் அம்பானியின் மகள்…! இன்று ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ரீடெய்ல் நிறுவனங்களின் இயக்குனர்…! யார் இந்த இஷா அம்பானி…!Representative Image.

Isha Ambani Career: முகேஷ் அம்பானி தனது மகளான இஷா அம்பானிக்கு, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மற்றும் ரீடெய்ல் நிறுவனத்தின் இயக்குனர் பதவியை வழங்கியுள்ளார்.

முகேஷ் அம்பானி

இந்தியாவின் முதன்மைப் பணக்காரர்கள் என்று கூறினால் முகேஷ் அம்பானி தான் நினைவுக்கு வருவார். பேச்சு வழக்கில் பேசப்படும் போது, நீ பெரிய அம்பானி வீட்டு பரம்பரை என்று சொல்லக் கூடிய அளவிற்கு அனைவரின் மனதிலும் நினைவில் இருக்கும். தனக்கு நேர்ந்தது போல், தன் பிள்ளைகளுக்கும் நேரக் கூடாது என்று நினைத்து தற்போது தனது வாரிசுகளுக்குப் பொறுப்புகளை நிர்வகித்துள்ளார்.

ஜியோவின் ஆரம்பம்

இன்று பெரும்பாலும், மக்கள் பயன்படுத்தக் கூடிய சிம் கார்டுகளில் பெரும்பாலானோர் ஜியோவையே பயன்படுத்துவர். ஆரம்பத்தில் இலவசமாகக் கொடுத்த ஜியோ சிம், இப்போது கட்டணத்தை உயர்த்திக் கொண்டே வருகிறது. ஆரம்பகாலத்தில் ஏராளமான சலுகைகளுடன் இந்த ஜியோ சிம் அறிமுகப்படுத்தப்பட்டது. மக்கள் முதலில் எது மிகக் குறைந்த கட்டணத்தைத் தரும் என்றும், எது அதிக அளவிலான ஆஃபரைத் தருகிறது என்று பார்த்து தான் வாங்குவர். அந்த வகையில் ஜியோ வந்த சமயத்தில், வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது.

இன்றும் ஜியோ என்றும் ஜியோ

ஜியோ சமீபகாலமாகவே அதன் கட்டணத்தை உயர்த்திக் கொண்டே வருகிறது இருந்த போதிலும், ஜியோ பயன்பாடு இன்றும் அதே அளவில் தான் உள்ளது. அந்த அளவிற்கு ஜியோ அனைவரின் மனதிலும் இடம் பிடித்து விட்டது. கட்டணத்தை உயர்த்திய போதிலும், இதனை யாரும் பயன்படுத்தாமல் இல்லை.

ஜியோவின் பின்னால் இஷா அம்பானி

இவ்வாறு ஆரம்ப காலத்தில் இலவசமாக ஜியோ சிம் வழங்கப்பட்டது. நாளடைவில் இதன் கட்டணம் உயர்ந்த போதும், இதனை அனைவரும் விட முடியாமல் இருப்பதற்கான காரணம் என்னவென்று இன்னும் சில பேரால் நிர்ணயிக்க முடியவில்லை. ஆனால், இதற்கான முழுக்காரணமும் இஷா அம்பானி தான் எனக் கூறப்படுகிறது. இதனை நிறைவேற்றியது முகேஷ் அம்பானியாக இருந்தாலும், இந்த ஐடியாவைக் கொண்டு வந்தது இஷா அம்பானி எனக் கூறுகின்றனர்.

வர்த்தகத்தில் வல்லமை

முகாஷ் அம்பானியின் வாரிசுகள் அனைவருமே எதாவதொரு துறையில் தேர்ச்சி பெற்றவர்களே ஆவர். அந்த வகையில், ஆகாஷ் அம்பானியைப் போலவே, நிஷா அம்பானியும் பிசினஸ் மேனேஜ்மென்ட்-ல் ஸ்டாண்ட்ஃபோர்டு யூனிவர்சிட்டியில் பட்டம் பெற்றவர் ஆவார். இவரது திறமையினைக் கண்டு, ரிலையன்ஸ் நிறுவனத்தை இன்னும் மேம்படுத்தும் திறன் இவருக்கு உள்ளது என கருதியே முகாஷ் அம்பானி, ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ரீடெய்ல் நிறுவனத்தின் இயக்குநர் பதவியை இஷா அம்பானிக்கு அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்