Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Cash Withdrawal Charges: ATM-ல் பணம் எடுக்க இனி அதிக கட்டணம்..? ஏடிஎம்ல பணம் எடுக்கறதுக்கு முன்னாடி கண்டிப்பாக இத தெரிஞ்சிக்கோங்க…!

Gowthami Subramani July 13, 2022 & 16:55 [IST]
Cash Withdrawal Charges: ATM-ல் பணம் எடுக்க இனி அதிக கட்டணம்..? ஏடிஎம்ல பணம் எடுக்கறதுக்கு முன்னாடி கண்டிப்பாக இத தெரிஞ்சிக்கோங்க…!Representative Image.

Cash Withdrawal Charges: வங்கி கணக்கிலிருந்து கார்டு பயன்படுத்தாமல், மொபைல் மூலம் ஏடிஎம்-களில் பணம் எடுக்கும் வசதியால், கட்டணம் அதிகமாக எடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

வங்கி கணக்கு

வங்கியில் கணக்கு வைத்து வரவு, செலவு வைப்பதற்கு ஏதுவாக பல்வேறு பயன்பாடுகள் இருக்கின்றன. அந்த வகையில் தற்போது நாம் பயன்படுத்தப்படும் ஏடிஎம் கார்டு உதவி கொண்டு, நாம் சேமிக்கும் பணத்தை எடுத்துக் கொள்ளலாம். அவ்வாறு, நமக்கு அருகில் இருக்கும் ஏடிஎம் மையத்திற்குச் சென்று நம் அக்கவுண்டில் உள்ள பணத்தை Withdraw செய்து பெறலாம். ஏடிஎம் கார்டு மட்டுமல்லாமல் கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுக்கலாம்.

ஏடிஎம் அல்லது கிரெடிட் கார்டு இல்லாமல் பணம் எடுப்பது எப்படி?

ஏடிஎம் கார்டு விஷயத்தில் நிறைய குழப்பங்கள் நிகழ்கின்றன. அந்த வகையில் ஏடிஎம் மையத்துக்குச் செல்லும் நபர்கள் கார்டை எடுக்காமல், அப்படியே விட்டுச் சென்று விடுவர். இதனால், ஏடிஎம் கார்டு கிடைக்காமல் மீண்டும் அதற்காக வங்கியில் எழுதி பெற வேண்டும். இது போன்ற பிரச்சனைகள் நிறைய பேருக்கு நிகழ்ந்துள்ளது. இதற்கு பதில் தரும் விதமாக, ஏடிஎம் மையத்தில் இருந்து கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதியை அறிமுகப்படுத்த அரசு நடைமுறைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இவ்வாறு ஏடிஎம் மூலம், பணம் எடுக்கும் வசதி நிறைய இருப்பினும், மொபைல் வழியாக யுபிஐ உதவி கொண்டு பணம் எடுக்கும் வசதி தற்போது கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலும், இந்த யுபிஐ வசதி கொண்டு வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போனில் உள்ள யூபிஐ மொபைல் அப்ளிகேஷன் மூலமாகவே பணம் எடுக்க முடியும். இவ்வாறு மொபைலில் யுபிஐ மூலம் எடுக்கப்படும் பணப் பரிவர்த்தனைக்கு ஏடிஎம் கார்டு தேவையில்லை. இந்த சிறந்த வசதி வாடிக்கையாளர்களுக்கிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ளதாக உள்ளது. இருந்தபோதிலும், இந்த சேவைக்கு வங்கிகள் தனியாக கட்டணம் வசூலிக்கிறதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

ரிசர்வ் வங்கி விளக்கம்

இவ்வாறு யுபிஐ மூலம் எடுக்கும் பணப்பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிப்பது குறித்து ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. அதன் படி, வழக்கமாக ஏடிஎம்-ல் பணம் எடுக்க வங்கிகள் வசூலிக்கக்கூடிய அதே கட்டணம் தான் வசூலிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்