Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஐடி நிறுவனங்களில் இனிமே சம்பளம் கம்மி தான்…! எவ்வளவு தெரியுமா...

Gowthami Subramani July 27, 2022 & 13:20 [IST]
ஐடி நிறுவனங்களில் இனிமே சம்பளம் கம்மி தான்…! எவ்வளவு தெரியுமா...Representative Image.

இன்று பெரும்பாலும், ஐடி தொழில்நுட்பத்தில் சேர ஏராளக்கணக்கானோர் விரும்புகின்றனர். வேகமாக வளர்ந்து வரும் இந்த தொழில்நுட்பத்துறையில், தற்போது சிறுவயதில் உள்ளவர்கள் மிகுந்த ஆர்வத்தைக் கொண்டுள்ளனர். அதே சமயம் ஐடி துறையில் சில முன்னணி நிறுவனங்கள் 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஊதியத்தொகை வழங்குதல் குறித்த ஓர் அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தொடர் சரிவு

இந்திய பொருளாதாரத்தின் தொடர்சரிவு, ஜிஎஸ்டி உள்ளிட்ட பலவற்றால் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதே சமயத்தில், இந்த ஜூன் காலாண்டில் விப்ரோ, இன்ஃபோசிஸ் மற்றும் டிசிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இந்தச் சரிவுக்கு முக்கிய காரணமாக அந்த நிறுவனங்கள் எண்ணுவது ஊழியர்களுக்கு அறிவித்த சம்பள உயர்வு மற்றும் இன்னும் பிற செலவுகளே காரணம் எனக் கூறப்படுகிறது.

ஆனால், உண்மையாக ஐடி நிறுவனங்களின் லாபத்தில் சரிவு ஏற்பட்டு வருவதற்குக் காரணம், ஊழியர்களுக்கு அளிக்கப்பட்ட சம்பள உயர்வு இல்லை. அந்த நிறுவனங்களின் Attrition Rate ஆகும்.

அட்ரிஷன் விகிதம் உயர்வு காரணம்

ஐடி நிறுவனங்கள் இந்த 2022 ஆம் நிதியாண்டில் ஊழியர்களின் சம்பளத்திற்காக 3 லட்சம் கோடி ஒதுக்கியுள்ளது. சம்பளத்திற்காக ஒதுக்கப்பட்ட இந்த தொகை மொத்த வருவாயில் 62% ஆகும். மேலும், இன்ஃபோசிஸ், டிசிஎஸ், விப்ரோ போன்ற நிறுவனங்களும் சம்பளத்திற்காக வருவாயில் இருந்து 53% முதல் 55% வரையிலான தொகை ஒதுக்கியுள்ளது. இது மட்டும் ஒரு முக்கிய காரணமாக நாம் கூற முடியாது.

ஐடி நிறுவனங்கள் ஊழியர்களைத் தக்க வைத்துக் கொள்ள முடியாமல் போனதும் லாபத்தில் சரிவு ஏற்பட்டதற்கான காரணம் ஆகும். சமீபத்தில் நாம் நிறைய கேள்விப்பட்டிருப்பது, ஊழியர்களை நிறுவனங்கள் லே ஆஃப் செய்தது. ஆனால், ஊழியர்கள் தேவை இருக்கும் போது பணியில் அதிகப்படியான ஊழியர்களைப் பணியில் அமர்த்துவதால் அதிகம் செலவு செய்ய வேண்டி இருக்காது. அதே சமயம், அட்ரிஷன் ரேட்-ம் குறைவாக இருக்கும்.

சராசரி சம்பளம் குறைவு

அதனைத் தொடர்ந்து இந்த காலாண்டில், ஐடி நிறுவன ஊழியர்களுக்கான சராசரி சம்பளம் 4.54 லட்சத்தில் இருந்து 4.5 லட்சமாகக் குறைந்துள்ளது.

இதற்கு இந்தியாவில் நிலவி வரும் பண வீக்கம் தான் காரணமா என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுகிறது. மேலும், நிறுவனங்கள் அதிகப்படியான Freshers-களை பணியில் நியமிக்கிறது. இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்