Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

திருமணமாகாத சான்றிதழ் பெறுவது எப்படி? முழு விவரங்களுடன்…

Gowthami Subramani July 26, 2022 & 13:56 [IST]
திருமணமாகாத சான்றிதழ் பெறுவது எப்படி? முழு விவரங்களுடன்…Representative Image.

How to Get Unmarried Certificate Online in Tamil: ஒருவருக்குத் திருமணம் நடந்து விட்டால், அதற்கு ஆதாரமாக சான்றிதழ் கேட்பார்கள் என்று கேள்விப்பட்டிருப்போம். அது என்ன திருமணமாகாத சான்றிதழ். சமீபத்தில் அரசு திருமணச் சான்றிதழ் தொடர்பான முக்கிய விவரம் ஒன்றை வெளியிட்டது. அதன் படி, கோவிலில் திருமணம் செய்ய வேண்டுபவர்கள் திருமணமாகாத சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும் என்பது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

திருமணமாகாத சான்றிதழை ஆன்லைனில் பெறுவது எப்படி?

நவீன டிஜிட்டல் உலகத்தில், எல்லாமே ஆன்லைனை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. இந்த காலகட்டத்தில், மக்கள் எந்த வித அலைச்சலும் இல்லாமல், சான்றிதழ்களை ஆன்லைனிலேயே பெற்றுக் கொள்ளலாம்.

திருமணமாகாத சான்றிதழ்

இது ஒரு சட்டப்பூர்வமான சான்றிதழ். ஒரு நபர் திருமணமாகாதவர் என்பதை இந்த சான்றிதழ் நிரூபிக்கிறது. இதனை ஒரு நபர் ஆன்லைன் மூலமாக எளிதாகப் பெறலாம்.

திருமணமாகாத சான்றிதழ் பெறுவதற்குத் தேவையான ஆவணங்கள்

ஒரு நபர் திருமணமாகாதவர் என்பதற்கான சான்றிதழ் பெற கீழ்க்காணும் ஆவணங்களைப் பெற்றிருக்க வேண்டும்.

  • புகைப்படம் (Photo)
  • ரேஷன் அட்டை அல்லது முகவரிக்கான சான்றிதழ் (Address Proof)
  • வயது சான்று (Age Proof)
  • விண்ணப்பதாரரின் சுய அறிவிப்பு (Applicants Self Declaration)
  • பிற ஆவணங்கள்

திருமணமாகாத சான்றிதழ் பெற விண்ணப்பிக்கும் முறை

திருமணமாகாத சான்றிதழ் பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கு முன், கீழே கொடுக்கப்பட்டவற்றைக் கட்டாயம் செய்திருக்க வேண்டும்.

  • இ-சேவை மையத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.
  • விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்ய CAN-ல் பதிவு செய்து CAN எண்ணைக் கொண்டிருக்க வேண்டும்.

படிகள்

  • முதலில் தமிழ்நாடு இ-சேவை மையத்தின் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • பின், அந்தப் பக்கத்தில் Login செய்வதற்குத் தேவையான விவரங்களைப் பதிவிட்டு Enter செய்ய வேண்டும்.
  • Captcha Code-ஐப் பதிவிட்டு Login என்பதைக் க்ளிக் செய்ய வேண்டும்.
  • Login செய்த பிறகு, ஒரு புதிய பக்கம் தோன்றும். அந்தப் பக்கத்தில் Services என்பதைக் க்ளிக் செய்து, அதில் Department Wise என்பதைக் க்ளிக் செய்யவும்.
  • Department Wise-க்குக் கீழ் Revenue Department என்பதைக் க்ளிக் செய்து கொள்ள வேண்டும்.
  • அந்த பக்கத்தில் REV-120 Unmarried Certificate என்பதைக் க்ளிக் செய்து கொள்ள வேண்டும்.
  • அந்தப் பக்கத்தைக் க்ளிக் செய்த பிறகு, அதில் விண்ணப்பதாரர்களின் விவரங்கள் அனைத்தையும் Enter செய்ய வேண்டும்.
  • விவரங்களைப் பதிவிட்ட பிறகு, Submit செய்த பின், சான்றிதழ் பதிவேற்றம் செய்வதற்கான பக்கம் தோன்றும்.

Photo

ரேஷன் அட்டை அல்லது Address Proof

வயது சான்று (Age Proof)

Applicants Self Declaration

பிற ஆவணங்கள் போன்றவற்றைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

  • அதன் பிறகு, சான்றிதழ் பெறுவதற்குத் தேவையான விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
  • கட்டணத்தைச் செலுத்திய பிறகு, அதன் Receipt-ஐ டவுன்லோடு அல்லது ப்ரிண்ட் செய்து கொள்ளலாம்.

இந்த செயல்முறைகள் முடிப்பதற்கு முன், விண்ணப்பப்படிவத்தை Draft-ல் Save செய்து கொள்ளலாம். அதன் பிறகு, கட்டணத்தைச் செலுத்துதல், ஆவணங்கள் பதிவேற்றம் முதலியவற்றைச் செய்யலாம்.

சமர்ப்பித்த விண்ணப்பப்படிவத்தை சரியாக இருக்கிறதா என்பதைச் சரிபார்த்துக் கொள்ளலாம்.

அதன் பிறகு, சில நாள்கள் கழித்து சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

How to Get Unmarried Certificate Online in Tamil | How to Get Unmarried Certificate Online in Tamilnadu | How to Get Unmarried Certificate in Tamilnadu | How to Get Unmarried Certificate in Tamilnadu | Unmarried Certificate Tamil nadu Download | Unmarried Certificate Status in Tamil nadu | Unmarried Certificate Online Apply | How to Get No Marriage Certificate | Unmarried Certificate Format in Tamil nadu | Rev-120 Unmarried Certificate Download | Where Do I Get Unmarried Certificate | How to Apply Unmarried Certificate in Tamilnadu


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்