Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

LIC IPO Listing Price: எல்ஐசி பட்டியலைப் பற்றி முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டியது….? சிறு முதலீட்டாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு

Gowthami Subramani May 21, 2022 & 15:55 [IST]
LIC IPO Listing Price: எல்ஐசி பட்டியலைப் பற்றி முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டியது….? சிறு முதலீட்டாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்புRepresentative Image.

LIC IPO Listing Price: நிறுவனத்தின் பங்குகளை முதலீட்டாளர்களுக்கு வழங்குவதிலிருந்து அந்த நிறுவனத்தைப் பட்டியலிடுவது ஐபிஓ என அழைக்கப்படும்.

இவ்வாறு, எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளை விற்பதற்கான நடவடிக்கையை மத்திய அரசு கையாண்டது. இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனமாக விளங்கும் எல்ஐசியின் பங்குகளை விற்பதற்கான காரணத்தையும், மேலும் எல்ஐசி பங்குகளை மிகக் குறைந்த அளவில் விற்பதற்கான காரணங்களையும் தெரியாமல், இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு எல்ஐசி நிறுவனத்திடம் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறு எல்லோராலும் பேசப்பட்ட எல்ஐசி ஐபிஓ 875-ல் நிறைவடைந்தது. இதற்கான மூலதனம் சந்தையைப் பொறுத்த வரை ரூ. 5.53 லட்சம் கோடி ஆகும். இதன் மூலம், இது நாட்டின் 5 ஆவது மிக உயர்ந்த நிறுவனமாக மாறியது குறிப்பிடத்தக்கது (LIC IPO Listing Price).

சிறு முதலீட்டாளர்கள் பாதிப்பு

சிறு முதலீட்டாளர்கள் 889 அல்லது 904 என்ற அளவில் முதலீடு செய்த 50 லட்சத்திற்கும் அதிகமானோர் அதாவது, பங்குச் சந்தையில் முதல் முறையாக முதலீடு செய்வதவர்களுக்கு இதில் லாபம் கிடைக்கவில்லை. இவர்கள் அனைவரும் 5% அளவு பெற்றிருந்தால் கூட, சந்தையில் முதலீடு செய்வதில் நம்பிக்கை கொண்டிருப்பர்.

சிறு முதலீட்டாளர்களுக்கான அறிவுரை

1. பயப்படக் கூடாது: பங்குச்சந்தையில் விற்பனை செய்வதும் மூலம், நாம் வாழ்நாள் சேமிப்பை இழக்கவில்லை. பொறுமையுட்ன செயல்பட வேண்டும். தினமும், எல்ஐசி ஐபிஓ விலையைப் பார்க்க வேண்டாம். எல்ஐசியின் அடிப்படைகள் நன்றாக இருப்பதால், 3 முதல் 5 ஆண்டுகள் வரை அளவில் எல்ஐசியில் முதலீடு செய்யலாம் (LIC IPO Date 2022 Listing Price).

2. ஸ்டாப் லாஸை 20% வைத்திருங்கள்

விலை மிகக் குறைந்த அளவிற்குச் செல்லாமல் போகலாம். இருந்த போதிலும், இவ்வாறு நடக்கும் போது நமக்குக் கிடைக்கும் நஷ்டத்தைப் பதிவு செய்வதுடன் அதனை விட்டு வெளியேற வேண்டும்.

3. அதிக முதலீடு செய்தல்

சிறு முதலீட்டாளர்களிடம் பெரும்பாலும், டிமேட் அக்கவுண்டுகள் இருப்பதன் காரணத்தால், எல்ஐசியில் மீண்டும் நீண்ட கால பார்வையுடன் அதிக முதலீடு செய்யத் தொடங்கலாம் (LIC IPO Share Price 2022).

4. ICICIPRU-வுடன் ஒப்பிடுதல்

ICICIPRU தனது சலுகை விலையை விட 8% தள்ளுபடி அளவிலே பங்குச் சந்தையில் விற்பனை செய்யத் தொடங்கப்பட்டது. ஆனால், இதன் விலை 4.5 ஆண்டுகளில் மட்டுமே 50 சதவீத அளவிற்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் போது, எல்ஐசிக்கு மட்டும் வேறு கதை இருக்குமா என்ன?.... (LIC IPO Share Price Listing Price)

5. நீண்ட கால வணிக மாதிரி

எல்ஐசி நிறுவனத்தின் வணிக மாதிரி நீண்ட காலம் ஆகும். எனவே, சந்தேதிக்காமல், நீண்ட கால ஆதாயங்களுக்காக நாம் முதலீடு செய்து கொள்ளலாம்.

சிறு முதலீட்டாளர்கள், இந்தக் குறிப்புகள் அனைத்தையும் நினைவில் வைத்துக் கொள்வது மிக நல்லது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்