Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Business Development Tips in Tamil: பிசினஸ்-ல தோல்வியையே சந்திக்கிறீங்களா..? இத ஃபாலோப் பண்ணுங்க… இனி என்னைக்கும் வெற்றி தான்…..

Gowthami Subramani May 21, 2022 & 13:45 [IST]
Business Development Tips in Tamil: பிசினஸ்-ல தோல்வியையே சந்திக்கிறீங்களா..? இத ஃபாலோப் பண்ணுங்க… இனி என்னைக்கும் வெற்றி தான்…..Representative Image.

Business Development Tips in Tamil: தொழில் தொடங்கும் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தொழிலை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.

தொழிலைத் தொடங்குவது சாதாரணமாக இருக்கலாம். ஆனால், அந்த தொழிலில் எவ்வாறு சாதிப்பது என்பதைப் பற்றித் தெரிந்து கொள்வது அவசியம். அவற்றில் சில முக்கியமானவற்றை இதில் காண்போம்.

சரியான வணிக மேம்பாட்டு உத்தியைத் தேர்வு செய்த ல்

நாம் செய்யும் பிசினஸைப் பற்றிய அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்வது முக்கியம். பிசினஸில் உள்ள லாப, நஷ்டங்கள், நஷ்டங்கள் வந்தால் அதனை எவ்வாறு சமாளிப்பது போன்ற அனைத்தையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். நாம் ஒரு பிசினஸ் புதிதாக செய்கிறோம் என்றால், அதன் அனைத்து யுக்திகளையும் தெரிந்து கொள்வதும் அவசியமாகிறது. அதில், மிக முக்கியமான செயல்முறைகளாக, Network, Referrals, Advertising மற்றும் Content Marketing போன்றவை உள்ளது. இந்த நான்கு ஸ்ட்ராடெஜிகளை உருவாக்குவதன் மூலம், வணிக மேம்பாட்டு செயல்முறையை மேம்படுத்த முடியும் (Self Business Ideas in Tamil).

வணிக மேம்பாட்டிற்கான செயல்முறையை உருவாக்குதல்

வணிக மேம்பாட்டிற்கு சரியான செயல்முறையை உருவாக்க வேண்டும். இந்த செயல்பாட்டின் மூலம் வணிகத்தை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை உருவாக்குவதாகச் செயல்படுகிறது. இதன் மூலம், நமது பிசினஸை மேம்படுத்தலாம். மேற்கூறிய ஸ்ட்ராடெஜியை உருவாக்குவதன் மூலம், நமது பிசினஸை மேம்படுத்தலாம். இந்த செயல்முறையைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். மார்க்கெட் ரிசர்ச் செய்ய வேண்டும். இந்த பிசினஸ் டெவலப்மன்ட் செயல்முறையைப் பின்பற்றி பிசினஸை மேம்படுத்தலாம் (Business Success Tips in Tamil).

தொழிலில் இலக்கு

செய்யக்கூடிய தொழிலில் இலக்கு ஒன்றை நிர்ணயிக்க வேண்டும். அந்த இலக்கை அடைவதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். தொழில் இலக்கின் மூலம், நம் லட்சியத்தை அடைய முடியும். அதாவது, தொழிலில் நாம் இந்த காலத்திற்குள் இந்த செயல்முறையை முடிக்க வேண்டும் என்று நாம் ஒரு இலக்கை வைத்துக் கொள்வதன் மூலம், அதனை விரைவாக முடிக்க முற்படுவோம் (Small Business Tips in Tamil). எந்த ஒரு தொழிலிலும் இலக்கு என்பது பெரிய அளவில் இருக்க வேண்டும். இவ்வாறு இலக்கைப் பற்றி நாம் தெரிந்து கொள்வதன் மூலமும், அதை அடைவதற்கான முயற்சியில் ஈடுபடுவதன் மூலமும் நம்முடைய பிசினஸ் மேம்பாடு அடையும்.

வணிக மேம்பாட்டுத் திறன்களை மேம்படுத்துதல்

தொழிலில் இலக்கை அடைவதுடன் அதை மென்மேலும் வளர்வதற்கு ஒத்துழைக்க வேண்டும். தொழிலில், வெற்றி, தோல்வி என்பது மாறி மாறி வந்து கொண்டு தான் இருக்கும்.ஆனால், அதற்குத் தகுந்தாற்போல, பிசினஸில் மேம்படுத்தும் முறைகளைப் பற்றி தெரிந்திருப்பது அவசியமாகும். இதன் மூலம் எத்தகைய சூழல் வந்தாலும், நம்மால் பிசினஸை மேம்படுத்த முடியும் (Own Business Ideas in Tamil).

தோல்வியைத் தழுவுதல்

முன்பு கூறியது போல, பிசினஸில் வெற்றி, தோல்வி இரண்டையும் சந்திக்க நேரிடும். எனவே, நாம் வெற்றி அடைந்தாலும், அதற்கு மேல் என்ன செய்யலாம் என்று சிந்திக்க வேண்டும். தோல்வியடைந்தால், அதனை எவ்வாறு சமாளித்து வெற்றிப்பாதையில் அழைத்துச் செல்வது என்பது பற்றித் தெரிந்திருத்தல் அவசியம் (Online Business Ideas in Tamil). அது மட்டுமல்லாமல், நாம் தோல்வியைத் தழுவினாலும், அதனை எவ்வாறு முறியடிக்கலாம் என்பது குறித்துத் தெரிந்திருந்தால், பிசினஸில் வெற்றி மட்டுமே பெற முடியும்.

முழு நேரம் கற்பது

கற்பதன் மூலம், நிறைய வகையான பலன்களைப் பெறலாம். அதே போல, தோல்வியில் நாம் கற்பதற்கு நிறைய உள்ளது. அது மட்டுமல்லாமல், பிசினஸில் நாம் எவ்வாறு முன்னேறுவது, எந்த விதமான பிரச்சனைகள் இருந்தாலும் எவ்வாறு சமாளிப்பது போன்ற அனைத்தையும் பற்றி அறிந்திருக்க வேண்டும். கற்பது என்பது, நமக்கு அறிவை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், ஒவ்வொரு செயலிலும் நாம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைப் பற்றித் தெரிந்திருத்தல் அவசியம் (Village Business Ideas in Tamil).

ஊக்கப்படுத்துதல்

பிசினஸில் நம்மை நாமே ஊக்கப்படுத்திக் கொள்வதும், நம்முடைய டீமை ஊக்கப்படுத்துவதும் மிக முக்கியமான ஒன்று. குறிப்பிட்ட பணியை செய்து முடிப்பது மட்டுமல்லாமல், அதற்கான இன்னும் சில வழிமுறைகளாக நமது திறனை மேம்படுத்தும் வகையில், நம்மை ஊக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு நாம் ஊக்கப்படுத்திக் கொள்வதன் மூலம் எந்த ஒரு கடினமான செயலைக் கூட சுலபமாகச் செய்ய முடியும் (Home Business Ideas in Tamil).

மேற்கூறியவை அனைத்தும் பிசினஸில் வெற்றி பெறக்கூடிய வழிமுறைகளாகும். இந்த முறைகளைப் பயன்படுத்துவதன் மூலம் நமது வணிகத்தை விரிவுபடுத்தி மேம்படுத்தலாம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்