Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

LIC Shares News: நான்கு இலக்கப் பட்டியலில் இருக்காத LIC பங்கு…? காரணம் இது தானா…

Gowthami Subramani May 17, 2022 & 15:50 [IST]
LIC Shares News: நான்கு இலக்கப் பட்டியலில் இருக்காத LIC பங்கு…? காரணம் இது தானா…Representative Image.

LIC Shares News: நாட்டில் மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனமாக விளங்கும் LIC-யின் பங்கு விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன் படி, மே மாதம் 4 ஆம் நாள், இந்தப் பங்கு விற்பனை தொடங்கப்பட்டது.

இது குறித்து, பங்குச்சந்தை நிபுணர்கள், LIC IPO-வில் நான்கு இலக்கப் பட்டியல் இருக்காது எனக் கூறுகின்றனர்.

எல்ஐசி ஐபிஓ பட்டியல் விவரம்

இந்தியாவின் மிகப் பெரிய ஆயுள் காப்பீட்டுக் கழகமாக விளங்கும் எல்ஐசி பங்குகள் இன்று அறிவிக்கப்படுகின்றன. இதன் சந்தை பங்குகள் பட்டியலிடப்பட்டு Special Pre-Open Session (SPOS)-ல் பரிவர்த்தனைகளுக்கு அனுமதிக்கப்படும். இந்தப் பங்குச் சந்தையின் விலை விவரங்களைத் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கும் இந்த நேரத்தில், Grey Market-ல்  இதன் மதிப்பு மந்த நிலையில் உள்ளது. அதாவது, Grey Market-ல் எல்ஐசி பங்கு விலை, 28 ரூபாய் தள்ளுபடியுடன் இருப்பதைக் குறிப்பிடுகிறது.

LICயின் பங்கு விலை...எவ்ளோக்கு விற்பனை...யாருக்கு லாபம் தெரியுமா?

நிபுணர்கள் கருத்து

எல்ஐசி ஐபிஓ பட்டியல் விலை குறித்து, நிபுணர்கள் கூறியதாவது, எல்ஐசி பங்குகள் சுமார் ரூ.910 முதல் ரூ.980 வரை பட்டியலிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், எல்ஐசி ஐபிஓ-வில் பங்குகள் நான்கு இலக்கப் பட்டியலில் இருக்காது. இந்த காரணத்தால், எல்ஐசி பங்குகள் சாஃப்டாக அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எல்ஐசி பங்குகளை வாங்குவதன் மூலம், ஒரு பெரிய பயனை அடையலாம் என எதிர்பார்க்கின்றனர். இருந்த போதிலும், எல்ஐசியின் பங்குகள் தனியார் மயமாதலானால், அதன் லாபம் வீதம் குறைவாக இருக்கும் மற்றும் விகித  உயர்வு தொடர்பான கருத்து வேறுபாடுகள் நிகழ வாய்ப்பிருப்பதாகத் தெரிகின்றன.

முதலில் காப்பீட்டு வணிகம் நீண்ட காலம் இருப்பதை காப்பீட்டாளர்கள் நீண்ட காலம் என்பதை உணர வேண்டும். மேலும், முதலீட்டாளர்கள் நீண்ட காலத்திற்கு நிறுவனத்துடன் இணைந்திருக்குமாறு பரிந்துரைக்கப்படுகிறது.

எல்ஐசி பங்குகளின் பட்டியல் சீராக இருந்தாலும், சில்லறை முதலீட்டாளர்கள் கொடுக்கப்படும் தள்ளுபடியின் காரணமாக மேலும், லாபம் ஈட்டலாம் எனத் தெரியப்படுகிறது.

எஸ்பிஐயில் இஎம்ஐ கட்டுகிறீர்களா..? ஷாக் நியூஸ் கொடுத்த பேங்க்.. இனி வட்டி உயரும்?

LIC IPO GMP எதிர்மறையாவதற்கான காரணம்

எல்ஐசி ஐபிஓ கிரே மார்க்கெட்டில் குறைந்து வருவதற்கு அதிகாரப்பூர்வமற்ற கிரே பிரீமியம் உலகச் சந்தைகளில் எதிர்மறையான வர்த்தகம் செய்யப்பட்டு பின்னடைவு அடைகிறது. இதனால், எல்ஐசி பங்குகளின் சந்தை விலை, சலுகை விலையில் 5% அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஓ சந்தையில் LIC-ன் மந்தநிலை

2021 ஆம் ஆண்டில் வளர்ச்சியைக் கண்ட இந்திய ஐபிஓ மார்க்கெட், இந்த ஆண்டு மந்தநிலையைக் கொண்டுள்ளது. இது, சமீபத்திய ஐபிஓ-க்களில் இருந்து அதிக மதிப்பிலான பங்குகளில் விலைத் திருத்தம், பங்குச்சந்தையில் ஏற்ற இறக்கம் என்பதை எடுத்துக்காட்டுகிறது.

இந்த 2022 ஆம் ஆண்டின் முதலில், 3 பெரிய ஐபிஓ-க்கள் மூலம் இந்தியாவின் முதன்மை சந்தைகள் மூலம் பெறப்படும் வருமானம் $995 மில்லியனாக இருந்தது. ஆனால், கடந்த ஆண்டும் இது $2.57 பில்லியனாக இருந்தது என கூறப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்