Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

LIC IPO Date 2022 Price: LICயின் பங்கு விலை...எவ்ளோக்கு விற்பனை...யாருக்கு லாபம் தெரியுமா?

Priyanka Hochumin May 17, 2022 & 13:50 [IST]
LIC IPO Date 2022 Price: LICயின் பங்கு விலை...எவ்ளோக்கு விற்பனை...யாருக்கு லாபம் தெரியுமா?Representative Image.

LIC IPO Date 2022 Price: ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (எல்ஐசி) ஆரம்பப் பொதுப் பங்கீடு (ஐபிஓ) பட்டியலிடப்பட்ட தேதி ஒரு வழியாக வெளியாகிவிட்டது. இதில் இந்தியா நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனம் மே 17 அன்று பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்படும் என்று கூறப்படுகிறது. இந்த செய்தி வெளியான உடன் எல்ஐசியின் ஐபிஓ, முதலீட்டாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற்றது. மே 4 முதல் 9 வரை (lic ipo opening date) நடந்தது மாரத்தான். இந்த ஆறு நாள் சந்தா காலத்திற்குப் பிறகு 2.95 மடங்கு சந்தா செலுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனின் ஆரம்ப கால பங்கு விற்பனையால் அரசுக்கு சுமார் ரூ. 20,557/- கோடி கிடைத்தது. 

மேலும் LIC இன் பங்கில் கலந்துகொண்ட அரசுக்குச் சொந்தமான காப்பீட்டு நிறுவனங்கள் பட்டியலுக்குப் பிறகு, கிட்டத்தட்ட ரூ. 6 லட்சம் கோடிக்கு மேல் மதிப்புடன் இந்தியாவின் ஐந்தாவது பெரிய நிறுவனமாக மாறும். இருப்பினும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டிசிஎஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் இன்ஃபோசிஸ் ஆகிய நிறுவனங்கள் காப்பீட்டு நிறுவனத்தை விட அதிக மூலதனத்தைக் கொண்டிருக்கும் என்று தெரியவருகிறது.

எல்ஐசி ஐபிஓ பங்கு விலை | LIC IPO Share Price Today

மையம் முதலீட்டாளர்களுக்கு ஒதுக்குவதற்காக, எல்ஐசி பங்குகளின் வெளியீட்டு விலையை தலா ரூ. 949 என்று நிர்ணயித்துள்ளது. எல்ஐசி பாலிசிதாரர்கள் மற்றும் சில்லறை முதலீட்டாளர்களுக்கு குறிப்பிட்ட டிஸ்கவுண்ட் வழங்கியதால் அவர்கள் பங்குகளை முறையே ரூ. 889 மற்றும் ரூ. 904 என்ற விலையில் பெற்றுள்ளனர். மே 9 எல்ஐசியின் ஐபிஓ முடிந்தது, பிறகு மே 12 அன்று பங்குகள் ஏலதாரர்களுக்கு ஒதுக்கப்பட்டது. இந்த ஐபிஓ மூலம் ரூ. 22.13/- கோடிக்கும் அதிகமான பங்குகள் அல்லது எல்ஐசியின் 3.5 சதவீத பங்குகளை அரசாங்கம் விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

LIC இன் ஒரு பங்கின் விலை ரூ. 902 - 949 (lic ipo share price today) ஆகும். இருப்பினும், பங்குகள் முதலீட்டாளர்களுக்கு மே 12 அன்று விலைக் குழுவின் மேல் முனையால் (upper end) ஒதுக்கப்பட்டது. 

எவ்வளவு பெரிய லாபம்? பங்கு சந்தையில் லாபம் கண்ட 10 இந்தியா நிறுவனங்கள்..... 

எல்ஐசி ஐபிஓ பட்டியல் | LIC IPO Opening Date

இன்று செவ்வாய்க்கிழமை, எல்ஐசியின் பங்குகளை பிஎஸ்இ மற்றும் என்எஸ்இயில் பட்டியலிடப்படும். எனவே முதலீட்டாளர்கள் எல்ஐசி ஐபிஓவின் பட்டியல் விலையை அறிய, பிஎஸ்இ இந்தியா மற்றும் என்எஸ்இ இந்தியா இணையதளங்களைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம். இந்த மிகப்பெரிய LIC IPO, முக்கியமாக சில்லறை மற்றும் நிறுவன வாங்குபவர்களால் மட்டுமே மூடப்பட்டது. இதில் வெளிநாட்டு முதலீட்டாளர் பங்கேற்பது முடக்கப்பட்டது. 

இதுவரை, 

2021 இல் - Paytm நிறுவனம் ஐபிஓவில் இருந்து திரட்டப்பட்ட தொகை ரூ. 18,300/- கோடி.

2010 இல் - கோல் இந்தியா ரூ. 15,500/- கோடியும்

2008 இல் - ரிலையன்ஸ் பவர் ரூ. 11,700/- கோடியும் திரட்டப்பட்டுள்ளது. 

எல்ஐசி நிறுவனம் கடந்த மாதம் அதன் ஐபிஓ அளவை 5 சதவீதத்தில் இருந்து 3.5 சதவீதமாகக் குறைத்துள்ளது. இருப்பினும் ரூ. 20,557/- கோடிக்கு மேல் குறைக்கப்பட்ட பிறகும் எல்ஐசி ஐபிஓ நாட்டிலையே மிகப் பெரிய ஆரம்ப பொதுச் சலுகையாகும். LIC ஐபிஓவுக்குச் செல்வதற்கு முன், ஆயுள் காப்பீட்டு நிறுவனமான ஆங்கர் முதலீட்டாளர்களிடமிருந்து ரூ. 5,627/- கோடிக்கு மேல் திரட்டியது குறிப்பிடத்தக்கது. மார்ச் மாதத்தில் பங்கு விற்பனையானது சந்தைக்கு வரும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, பங்குச்சந்தை என்பது நிச்சயமற்ற ஒன்றாகும் அத்துடன் ரஷ்யா - உக்ரைன் போர் நடந்ததால் ஏப்ரல் மாதம் துவங்கிய நடப்பு நிதியாண்டுக்கு தள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

எஸ்பிஐயில் இஎம்ஐ கட்டுகிறீர்களா..? ஷாக் நியூஸ் கொடுத்த பேங்க்.. இனி வட்டி உயரும்?

எல்ஐசி வெளியீட்டின் மூலம் கிடைக்கும் வருமானம், இந்த நிதியாட்டில் சுமார் ரூ. 65,000/- கோடி இலக்கை பெரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த முதலீட்டு இலக்கில் மூன்றில் ஒரு பங்கை ஈட்டியதாக தகவல் வெளியாகின.

உடனுக்குடன் செய்திகளை (Business News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்