Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஓய்வூக்குப் பின் உங்களுக்குக் கிடைக்கும் ரூ.50,000 பென்சன் தொகை..! எப்படி பெறுவது..?

Gowthami Subramani September 14, 2022 & 14:00 [IST]
ஓய்வூக்குப் பின் உங்களுக்குக் கிடைக்கும் ரூ.50,000 பென்சன் தொகை..! எப்படி பெறுவது..?Representative Image.

நலத்திட்ட உதவிகள்

மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. அந்த வகையில் பணி ஓய்வு பெற்ற பிறகு நிலையான வருமானம் பெற வேண்டியது அவசியம் ஆகும். ஓய்வுக்குப் பின், பணத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அரசு வழங்கும் சிறப்பான திட்டமே ஓய்வூதியத் திட்டங்கள்.

எதிர்காலத்திற்கான சேமிப்பு

இளமைக் காலத்தில் இருந்தே நாம் ஓய்வுக்கால வருமானத்திற்கு முதலீடு செய்தால், பிற்காலத்தில் நாம் யாரையும் சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. குறிப்பாக, கஷ்டமான காலங்களில் எவரையும் எதிர்பார்க்காமல் நம்முடைய தொகையை வைத்தே சமாளிக்க கூடியதாக இருக்க வேண்டும்.

அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு

அதன் படி, அரசு ஊழியர்களுக்கு ஒய்வூதியத் திட்டங்களின் மூலம், ஓய்வுக் காலத்திற்குப் பின் பெறுகின்றனர். ஆனால், தனியார் ஊழியர்கள் அவர்களின் விருப்பத்தில் பென்சன் திட்டங்களில் சேர்ந்து முதலீடு செய்ய வேண்டும். இவ்வாறு, அவர்கள் செய்யும் முதலீட்டைப் பொறுத்தே அதிக அளவு வருமானம் கிடைக்கும்.

தேசிய பென்சன் திட்டம்

அதன் படி, தனியார் ஊழியர்களுக்கான ஒரு அற்புதமான திட்டம் தேசிய பென்சன் திட்டம் ஆகும். இந்த திட்டம் முதலில் அரசு ஊழியர்களுக்காக மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்ட திட்டமாகும். பின்னர், தனியார் ஊழியர்களும் இந்த திட்டத்தில் கணக்கு தொடங்கி முதலீடு செய்து வருகின்றனர்.

எப்படி பெறுவது?

இவ்வாறு, இந்த தேசிய பென்சன் திட்டத்தின் மூலம் முதலீடு செய்து, ஓய்வூதியத்திற்குப் பின்னர் பென்சன் வருமானம், வருமான வரிச் சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு பலன்களைப் பெறலாம். இந்த தேசிய பென்சன் திட்டத்தில் உரிய முறைகளுடன் திட்டமிட்டு, முதலீடு செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால், பணி ஓய்விற்குப் பிறகு, மாதம் ரூ.50,000 கூட பெற முடியும்.

இந்த திட்டத்தில் அதிகபட்சம் 60% வரை முதலீட்டாலர்கள், எடுத்துக் கொண்டு மீதத்தொகையை வைத்து ஆண்டுத் தொகை வாங்க வேண்டும். அதன் படி, இந்த மீதத் தொகை வாயிலாக மாதந்தோறும் ஓய்வூதியத்திற்குப் பின் பென்சன் பெற முடியும்.

அதே போல, இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் தொகை மற்றும் பணி ஓய்வு பெறும் போது எடுத்துக் கொள்ளும் தொகைக்கு வருமான வரி கட்டுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்