Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

மாதம் ரூ.64,000 பென்சன் தொகை தரும் திட்டம்… இத மட்டும் பண்ணா போதும்…!

Gowthami Subramani November 12, 2022 & 17:45 [IST]
மாதம் ரூ.64,000 பென்சன் தொகை தரும் திட்டம்… இத மட்டும் பண்ணா போதும்…!Representative Image.

மத்திய மற்றும் மாநில அரசு, பொதுமக்களின் நன்மைக்காக பல்வேறு அரசுத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தேசிய பென்சன் திட்டமானது மக்களுக்கு சிறந்த பலன்களைத் தருவதாக உள்ளது.

மாதம் ரூ.64,000 பென்சன் தொகை தரும் திட்டம்… இத மட்டும் பண்ணா போதும்…!Representative Image

தேசிய பென்சன் திட்டம்

தேசிய பென்சன் திட்டத்தை, பென்சன் ஒழுங்குமுறை ஆணையமாக விளங்கும் PFRFA நிர்வகித்து வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், அரசு ஊழியர்கள் மட்டுமல்ல. தனியார் ஊழியர்களும் தங்களது பெயரில் கணக்கு தொடங்கி முதலீடு செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தில் இணைந்து எப்படி முதலீடு செய்யலாம் என்பதையும், மாதந்தோறும் பென்சன் தொகை பெறும் முறைகளையும் பற்றிக் காண்போம்.

மாதம் ரூ.64,000 பென்சன் தொகை தரும் திட்டம்… இத மட்டும் பண்ணா போதும்…!Representative Image

ரூ.2 கோடி நிதி

இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் எதிர்கால வாழ்க்கைக்கு நமக்குத் தேவையான தொகையினைப் பெறலாம். நிகழ்காலத்தில் இந்தத் திட்டத்தில் சேர்ந்து நாம் சேர்த்து வைக்கும் தொகையானது, எதிர்காலத்தில் நமக்கு உதவும். இத்திட்டத்தின் மூலம், ஆண்டு தோறும் 2 லட்சம் ரூபாய் வரையிலான வருமான வரியைச் சேமிக்க முடியும். தேசிய பென்சன் திட்டத்தில் தொடர்ந்து முதலீடு செய்யும் போது, பணி ஓய்வு பெறும் சமயத்தில் கிட்டத்தட்ட ரூ.2 கோடி நிதியைப் பெற முடியும் எனக் கூறப்படுகிறது.

மாதம் ரூ.64,000 பென்சன் தொகை தரும் திட்டம்… இத மட்டும் பண்ணா போதும்…!Representative Image

மாதம் ரூ.64,000 பென்சன் தொகை

இந்த சேமிப்புத் திட்டத்தில், 40 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து மாதந்தோறும் ரூ.5000 தேசிய பென்சன் திட்டத்தில் முதலீடு செய்து வந்தால், இறுதியில் ரூ.1.90 கோடி ரூபாய்க்கு அதிகமான நிதி கிடைக்கும். இந்த தொகையை எடுத்து SWP அதாவது Systematic Withdrawal Plan என்ற திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம், மாதந்தோறும் கிட்டத்தட்ட 64,000 ரூபாய் தொகையைப் பென்சனாகப் பெற முடியும்.

மாதம் ரூ.64,000 பென்சன் தொகை தரும் திட்டம்… இத மட்டும் பண்ணா போதும்…!Representative Image

அது மட்டுமல்லாமல், 40 ஆண்டுகள் அல்லாமல் 20 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.5,000 முதலீடு செய்து வருவதன் மூலம், இறுதியில் ரூ.1.27 கோடி ரூபாய் நிதி கிடைக்கும். இதையும், Systematic Withdrawal Plan திட்டத்தில் முதலீடு செய்து மாதந்தோறும் பென்சன் தொகையாகப் பெறலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்