Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

New GST Rate List 2022 in Tamil: இனிமே இதுக்கலாம் ஜிஎஸ்டி…! ஜூலை 18 முதல் அமல்…! மக்களே உஷார்….!

Gowthami Subramani [IST]
New GST Rate List 2022 in Tamil: இனிமே இதுக்கலாம் ஜிஎஸ்டி…! ஜூலை 18 முதல் அமல்…! மக்களே உஷார்….!Representative Image.

New GST Rate List 2022 in Tamil: கடந்த ஜூன் 28 மற்றும் 29 ஆகிய நாட்களில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் மீட்டிங்கில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜிஎஸ்டி வரி விதிகளைப் பற்றி கூறினார். அதன் படி, ஜிஎஸ்டி வரி மாற்றங்கள் வரும் ஜூலை மாதம் 18 ஆம் நாள் முதல் அமலுக்கு வர உள்ளதாகக் கூறப்படுகிறது.

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் இந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்று, பொருள்களுக்கான வரி ஏற்றம் பெற்றுக் கொண்டு வருகிறது. அதன் படி, 47 ஆவது கவுன்சில் கூட்டம் இந்த 2022 ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில் 28 மற்றூம் 29 அகிய இரு நாள்கள் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வரி உயர்வு செய்யப்பட்டதற்கு எந்த மாநிலமும் மறுப்பு தெரிவிக்கவில்லை. இதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது வரி மாற்றங்களினால், பணவீக்கத்தில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி மாநில அரசுக்கு நன்றாகத் தெரியும் என்று கூறினார்.

48 ஆவது ஜிஎஸ்டி நடைபெறும் இடம்

அதன் படி, இதற்கு அடுத்த 48 ஆவது ஜிஎஸ்டி கூட்டம் வரும் ஆகஸ்ட் மாதம் தமிழ்நாட்டில் உள்ள மதுரையில் நடத்த முடிவு செய்துள்ளது. இது தமிழ்நாட்டின் நிதியமைச்சரான பழனிவேல் தியாகராஜனின் அழைப்பை ஏற்று ஆகஸ்ட் மாதத்தில் இரு தினங்களுக்கு நடைபெற இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஜூலை 18 முதல் அமல்படுத்தப்படும் ஜிஎஸ்டி வரி

இதில், சில பொருள்களுக்கு முன்னரே குறிப்பிட்ட ஜிஎஸ்டி வரி மற்றும் தற்போது அதற்கான மாற்றியமைக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி விகிதங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

வரி விதிக்கப்பட்ட பொருள்கள்

ஜிஎஸ்டி பழைய வரி

ஜிஎஸ்டி வரி மாற்றம்

சோலார் வாட்டர் ஹீட்டர்

5%

12%

தயாரிக்கப்பட்ட / முடிக்கப்பட்ட தோல்

5%

12%

தோல் பொருள்கள் மற்றும் காலணி உற்பத்தி தொடர்பான வேலை

5%

12%

தைக்கப்பட்ட ஜவுளிகள்

5%

12%

பெட்ரோலியம் / நிலக்கரி மீத்தேன்

5%

12%

அச்சிடுதல், எழுதுதல் மற்றும் வரைதலுக்கான மை

12%

8%

வெட்டும் கத்திகள், பென்சில் ஷார்ப்னர்கள், பிளேடுகள், கரண்டிகள், முட்கரண்டிகள், ஸ்கிம்மர்கள், கேக்-சர்வர்கள், ஃபோர்க் ஸ்பூன்ஸ்

12%

8%

LED விளக்குகள், விளக்குகள் மற்றும் சாதனங்கள், அச்சிடப்பட்ட சர்க்யூட் போர்டு

12%

8%

Tetra Pak

12%

8%

மின்சாரம் மூலம் இயக்கப்படும் பம்புகள்

12%

8%

ரயில் பாதைகள், மெட்ரோ, சாலைகள், பாலங்கள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், பிணங்களை எரிக்கும் இடம் போன்றவற்றிற்கான பணி ஒப்பந்தம்

12%

8%

விதைகள், தானியங்கள், பருப்பு வகைகள், முட்டைகள், பழங்கள் மற்றும் பால் கறக்கும் இயந்திரங்கள், பால் இயந்திரங்களைச் சுத்தம் செய்தல் மற்றும் தரம் நிர்ணயம் செய்வதற்கான இயந்திரங்கள்

12%

8%

துண்டான மற்றும் பளபளப்பான வைரங்கள்

0.25%

1.5%

ஆஸ்டோமி உபகரணங்கள், ஆர்த்தோபேட்டிக் (எலும்பியல்) உபகரணங்கள்

12%

5%

ரோப்வே மூலம் சரக்குகள் மற்றும் பயணிகளின் போக்குவரத்து (உள்ளீட்டு வரிக்கடன் உடன்)

18%

5%

வாடகைக்கு எடுக்கும் லாரி அல்லது சரக்கு வண்டிகள்

18%

12%

 

திரும்பப் பெற வலியுறுத்திய பொருள்கள்

வரி விதிக்கப்பட்ட பொருள்கள்

ஜிஎஸ்டி பழைய வரி

ஜிஎஸ்டி வரி மாற்றம்

காசோலை

0%

18%

மேப் மற்றும் சார்ட்

0%

12%

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்