Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

New Pension Rules: புதிதாக கொண்டு வரப்பட்ட பென்சன் விதிமுறைகள்…! நீங்க பென்சன் வாங்குறீங்களா..? அப்போ கண்டிப்பா இத தெரிஞ்சிக்கோங்க....

Gowthami Subramani July 12, 2022 & 13:15 [IST]
New Pension Rules: புதிதாக கொண்டு வரப்பட்ட பென்சன் விதிமுறைகள்…! நீங்க பென்சன் வாங்குறீங்களா..? அப்போ கண்டிப்பா இத தெரிஞ்சிக்கோங்க....Representative Image.

New Pension Rules: மத்திய அரசு ஊழியர்களுக்காக வழங்கப்படும் ஓய்வூதிய விதிமுறைகளில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இந்த புதிதாக கொண்டு வந்த மாற்றங்களைக் கண்டிப்பாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஊழியர்களுக்கான பென்சன் தொகை

மத்திய மற்றும் மாநில அரசுகள் தங்கள் ஊழியர்களுக்கென குடும்ப பென்ஷன் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் அடிப்படையில், மாதந்தோறும் ஊழியர்களுக்கு பென்சன் தொகை வழங்கப்படும். ஆனால், கடந்த சில மாதங்களாகவே, இதில் புதிய மாற்றங்களை கொண்டு வருவது குறித்து கூறப்பட்டு வந்தது. அதன் படி, மத்திய அரசு ஊழியர்களுக்கான பென்சன் தொகையில் புதிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.

புதிய விதிமுறைகள்

சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கும் பென்சன் விதிமுறைகளைத் திருத்தியுள்ளது. அதன் படி, புதிய விதிமுறைகள் குறித்த விவரங்களையும், மத்திய அரசு அளித்துள்ள அறிவிக்கையின் படி, இந்த புதிய மாற்றங்கள் யார் யாருக்கு குறித்த தேவையான தகவல்கள் அனைத்தையும் இந்தப் பதிவில் காணலாம்.

பழைய விதிமுறை என்ன?

மத்திய அரசு அறிவித்த பழைய விதிமுறைகளின் படி, மத்திய அரசு ஊழியர்கள் பணிக்காலத்தின் போது தொலைந்து விடுவாராயின், அவர்களது குடும்பத்திற்கு பென்சன் தொகை வழங்கப்படமாட்டாது. ஆனால், மத்திய அரசு ஊழியர் தொலைந்து 7 ஆண்டுகள் கழித்த பிறகு அல்லது இடைப்பட்ட காலத்தில் இறந்து விட்டார் என உறுதி செய்யப்பட்டால் அதன் பிறகே குடும்ப ஓய்வூதிய வழங்கப்படும்.

புதிய விதிமுறைகள் யாருக்கு?

மத்திய அரசு, அனைத்து மாநிலங்களில் உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு பென்ஷன் விதிமுறைகளை மாற்றவில்லை. அதன் படி, மாவோயிஸ்ட் கட்சிகள் மற்றும் தீவிரவாதம் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டுள்ள வட கிழக்கு மாநிலங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீரில், காணாமல் போன மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் குடும்ப பென்சன் விதிமுறைகளை சமீபத்தில் திருத்தி புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்துள்ளது.

மாற்றப்பட்ட புதிய விதிமுறைகள்

புதிய விதிமுறைகளின் படி, மேலே குறிப்பிட்டுள்ளவாறு அதாவது தீவிரவாதம் மற்றும் மாவோயிஸ்ட் கட்சிகளால் பாதிக்கப்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் வேலையில் இருக்கும் போது காணாமல் போனால், அவர்களது குடும்பத்திற்கு குடும்ப பென்சன் தொகை வழங்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ளது.

இன்னும் சில பயன்கள்

இந்த புதிய பென்சன் விதிமுறைகளின் படி, பணிக்காலத்தின் போது மத்திய அரசு ஊழியர்கள் தொலைந்து விட்டால் சம்பள நிலுவைத் தொகை, பணிக்கால பணிக்கொடை, ஈட்டிய விடுப்பு உள்ளிட்ட பல்வேறு பலன்கள் அவர்களது குடும்பத்திற்கு வழங்கப்படும்.

மீண்டும் திரும்பி வரும் சமயத்தில்

இவ்வாறு காணாமல் போன அரசு ஊழியர்களின் குடும்பத்திற்கு பென்சன் தொகை வழங்கப்படும். இந்த நிலையில், காணாமல் போன அரசு ஊழியர் திரும்பி வருவாராயின், அந்த இடைப்பட்ட காலத்தில் அவரது குடும்பத்திற்கு வழங்கப்பட்டு வந்த பென்சன் தொகை அவர்களின் சம்பளத் தொகையில் இருந்து பிடிக்கப்படும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்